28.8 C
Jaffna
December 7, 2023
மலையகம்

சடலத்துடன் பயணித்த பயணிகள் பேருந்து

கண்டி போதனா வைத்தியசாலையில் கிளினிக்கிற்குச் சென்று விட்டு பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பேருந்திலேயே உயிரிழந்துள்ளார்.

டிக்ஓயா படல்கல மேல் பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் முச்சக்கரவண்டி சாரதி என்பதுடன், தொற்று அல்லாத நோய்க்காக மாதம் ஒருமுறை கண்டி போதனா வைத்தியசாலைக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் நேற்று (19) வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, இன்று காலை ஹட்டனில் இருந்து பொடைஸ் நோக்கி பயணிக்கும் தனியார் பேரூந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளார்.

இவர் பேருந்தில் இருந்து இறங்காததால் சந்தேகமடைந்த மற்ற பயணிகள் இது குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் தெரிவித்ததையடுத்து அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலம் அதே பேருந்தில் டிக் ஓயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நண்பர்களுடன் தங்கியிருந்த யுவதியின் மரணத்தில் மர்மம்!

Pagetamil

வீதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது!

Pagetamil

இரண்டு இராணுவத்தினர் தற்கொலை!

Pagetamil

மின்சாரம் தாக்கி தந்தையும், மகளும் பலி

Pagetamil

UPDATE: மண்மேடு சரிந்து விழுந்ததில் 2 யுவதிகள் பலி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!