கிளிநொச்சியில் புதையலை தேடி மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியில் எதுவும் சிக்கவில்லை.
தனியார் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி இன்று (10) அகழ்வுபணி முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
17 அடிவரை அகழ்வு நடைபெற்ற போதிலும், எவையும் சிக்கவில்லை. இதன்போது தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர், பொலிசார், சிறப்பு அதிரடிபடையினர் முன்னிலையாகியிருந்தனர்.
இரண்டு கனரக இயந்திரங்கள் மூலம் அகழ்வு பணி நடைபெற்றது. இதன் பொது எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் பணி இடைநிறுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியான பணி எதிர்வரும் 22.10.2023 அன்று 9.00 மணியளவில் மீண்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1