27.9 C
Jaffna
December 12, 2024
Pagetamil
இலங்கை

தனது கஜானவை நிரப்பவே டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராக செயற்படுகின்றார்!

தனது கஜானவை நிரப்பவே டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்து கடற்றொழில் அமைச்சராக செயற்படுகின்றார் என அகில இலங்கை தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டிலே கடற்தொழில் சம்மந்தமான சட்டம் கொண்டுவரப்பட்டது.இந்த சட்டத்திருத்தத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கபட்டுள்ளது.குறித்த சட்டதிருத்தமூலம் தொடர்பாக மக்களை ஏமாற்றும்விதமாக ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.
கடற்றொழிலுக்கு சம்பந்தமில்லாதவர்கள் ஒரு கட்சியின் பிரதிநிதிகள் குறித்த கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.இந்த சட்டம் 1996 ஆம் ஆண்டு பல மீனவர் நலன்களை முன்வைத்தபொழுதிலும் அதனையெல்லாம் புறக்கணித்து கொண்டு வரப்பட்டது தொழிலாளர்களுக்கு பாரிய ஏமாற்றத்தை கொடுத்தது.பணிப்பாளர் அங்கீகாரம் பெற்றவர்கள் அமைச்சரினால் அடையாளப்படுத்தபட்ட இடத்தில் மாத்திரம் தொழில் மேற்கொள்ளல் என்பன இதன்மூலம் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
வெளிநாட்டு மீனவர்களையும் இதன்மூலம் தொழிலுக்குள் அனுமதிக்கலாம்.ஆகவே இதனை விடுத்து ஏற்கனவே 1996 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தை திருத்தி 2017 ஆம் ஆண்டு இழுவைமடிச்சட்டத்தையும் உள்ளீர்த்து மீனவ நலனை பேணும் ஆக்கபூர்வமான சட்டமாக இதனை மாற்றவேண்டும்.

மேலும் தற்பொழுது இந்தியாவிற்கு பேச்சுவார்த்தை செல்வதற்காக உண்டியலில் சிலர் பணம் திரட்டுகின்றனர் இதன் இரண்டு விதமாக பார்க்கலாம் மீனவர்கள் பிச்சையெடுக்கின்றார்கள் ,பிச்சையெடுத்துதான் இந்தியாவிற்கு பேச்சுவார்த்தைக்கு சொல்லுகின்றார் கள் எனவும் கூறலாம்.அரசாங்கம் 2016 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையை நடாத்தியிருந்து .இதன்மூலம் இணக்கப்பாட்டினையும் எட்டியிருந்தது.இருப்பினும் தற்பொழுது அரசியல் இலாபத்திற்காக தொடர்ந்து இவ்வாறான பேச்சுவார்த்தை மாயவலைகளை உருவாக்குவதை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம்.

கடற்றொழில் அமைச்சர் தொடர்ச்சியாக தான்தோன்றிதனமாக செயற்படுகின்றார். அனைவரும் ஏற்றுகொள்ள கூடிய வகையில் இவர் செயற்படவில்லை .இந்த பேச்சுவார்த்தை கடற்றொழில் அமைச்சரின் கபட நாடகமே இந்த பேச்சுவார்தையாகும்.

அணையில் இந்திய மீனவர்கள் தாக்கபட்டிருந்தார்கள் .இந்தி துணைத்தூதரகம் சில கிராமங்களை இதில் ஈடுபட்டுள்ளார்கள் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் சுட்டிகாட்டுவதாக தெரிவித்தனர்.இதனை வைத்து பார்க்கும் பொழுது மாபெரும் சக்தி ஒன்று இதன் பின்னால் செயற்பட்டுள்ளது .

இதன் மூலம் இந்தியாவில் போராட்டம் வெடித்துள்ளது. யாராக இருந்தாலும் பாதிக்கப்பட்ட மீனவருக்கு எமது மனவருத்தத்தை தெரிவிக்கின்றோம்.

மகிந்த காலத்தில் கடலோர கிராம மீனவர்கள் புறக்கணிக்கப்பட்டு சீன நிறுவனத்திற்கு கடல் வளங்கள் பகிரப்பட்டது இதற்கு மகிந்தவுடன் ஒட்டிக்கொண்டிருந்த தமிழ் அமைச்சரும் கையூட்டு பெற்றதாக அறியமுடிந்தது இன்றும் மொட்டு ரணில் கூட்டணியிலும் அவ்வாறே இடம்பெறுகின்றது.அரசுடன் ஒட்டியிருக்கும் டக்ளஸ் தேவானந்தாவினை அரசினால் வெளியேற்ற முடியவில்லை. தொல்பொருள் சரணாயலயம் என பல்வேறு காரணங்களை கூறி மீனவர்களை அந்நியபடுத்துகின்ற செயல் இருந்தது .

கடற்றொழிலாளர்களை கக்ஷதமதஉ தொழிலை மாற்றவைத்து கடல் வளத்தை கைப்பற்றி பண்ணையை மேம்படுத்தும் திட்டங்களை டக்ளஸ் முன்னெடுத்துள்ளார் தனது பினாமிகளை வைத்து இந்த தொழ லை முன்னெடுத்து தனது கஜானாவையும் நிரப்பி தனக்கு ஆதரவாக ஆட்களை திரட்டுகின்றார் இந்திய இழுவைமடி பிரச்சினையை தீரவிடாது டக்ளஸ் வைத்திருப்பதன் நோக்கமும் இதுதான் இலங்கை இந்திய பிரச்சனையை பெருக்கி ஈழ மக்கள் கடற்றொழிலை கைவியவைப்பதே இவரது நோக்கமாக இருக்கின்றது .

பெரும்பான்மை கட்சியின் பிரதமர் இந்தியாவில் கூறுகிறார் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பேன் என்று ஆனால் அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தான் விடமாட்டேன் என்கிறார். அமைச்சர் காலத்துக்கு காலம் நேரத்திற்கு நேரம் தாளத்தை மாற்றுவார். நாம் அவதானமாக இருக்கவேண்டும்.

தற்பொழுது மீனவர் பொருளாதார வலயமும் அந்நிய சக்திகளை நாட்டிற்குள் ஊடுருவதையே அடிப்படையாக கொண்டமைந்துள்ளது. எனவே வடபுலத்து மீனவர்கள் நாம் எமது கடல் வளம் பறிபோகும் சந்தர்ப்பத்தில் அதற்கு எதிராக நிச்சயமாக கிளர்ந்து எழுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அரிசி இறக்குமதியில் நெருக்கடி

east pagetamil

கடந்த வருடம் எலிக்காய்ச்சலால் 200 பேர் உயிரிழப்பு!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

2024 வாக்காளர் பதிவின் அடிப்படையிலேயே உள்ளூராட்சித் தேர்தல்

Pagetamil

ரௌடியை போல நடந்த அர்ச்சுனா: அதிர்ச்சி வீடியோ!

Pagetamil

Leave a Comment