உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமிர ஆகியோர் இன்று (19) இரவு இந்தியாவுக்குச் செல்லவுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் நிர்வாகத்தினருக்கும் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பல சுற்று விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவித்த அந்த அதிகாரி, இரு வீரர்களையும் இன்றிரவு வெளியேற தயாராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1