பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நெதர்லாந்து கால்பந்து வீரர் அன்வர் எல்-காசியை, ஜெர்மன் கிளப்பான Mainz 05 இடைநீக்கம் செய்துள்ளது.
தற்போது, Mainz 05 கிளப்பில் அன்வர் எல்-காசி ஆடி வருகிறார். “கிளப்பால் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கருதிய விதமாக செயற்பட்டதாகவும், அது “கிளப்பின் மதிப்புகளுடன் ஒத்துப்போகவில்லை” என்றும் கூறியுள்ளது.
மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த எல்-காசி, நெதர்லாந்தை இரண்டு முறை பிரதிநிதித்துவப்படுத்தினார். செப்டம்பர் இறுதியில் Mainz 05 கிளப்புடன் கையெழுத்திட்டார்.
இதற்கு முன்பு நெதர்லாந்தின் முன்னணி கிளப்களான PSV Eindhoven மற்றும் Ajax மற்றும் பிரீமியர் லீக் கிளப்புகளான Aston Villa மற்றும் Everton ஆகியவற்றிற்காக விளையாடியுள்ளார்.
எல் காசி இன்ஸ்டாகிராமில் முதலில் ஒரு இடுகையைப் பகிர்ந்து கொண்டார். அதன் கடைசி பகுதி “நதி முதல் கடல் வரை, பாலஸ்தீனம் சுதந்திரமாக இருக்கும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. பாலஸ்தீனம் ஜோர்டானில் இருந்து மத்திய தரைக்கடல் வரை நீட்டிக்க வேண்டும் என்பதே இதன் பொருள். இது ஒரு வகையில் இஸ்ரேலின் இருப்புக்கான உரிமையை மறுக்கிறது. அந்த இடுகை பின்னர் நீக்கப்பட்டது.
ஜேர்மனியில் உள்ள பாலஸ்தீனியர்களும் அவர்களது ஆதரவாளர்களும் பாலஸ்தீன சார்பு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதாக புகார் அளித்துள்ளனர்.மேலும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படவில்லை.