28 C
Jaffna
December 5, 2023
கிழக்கு

மனைவியுடன் தகராறு: தனக்குத்தானே தீவைத்து பொலிசாரையும் கட்டிப்பிடித்த கணவன்!

உடலில் பெற்றோலை ஊற்றி தீக்குளித்த நபரை காப்பாற்ற சென்ற வாழைச்சேனை பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் வாழைச்சேனை மாஞ்சோலை பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையான குறித்த நபரின் மனைவி மத்திய கிழக்கு நாட்டில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைக் கணவனுக்கு மனைவி பணம் அனுப்புவது குறைவு. தனது போதைப்பாவனைக்கு தனியாக பணம் தர வேண்டுமென கணவன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அத்துடன், தனது 17 வயதான மகளை அடித்து சித்திரவதையும் செய்து வந்துள்ளார்.

மனைவியிடம் பணம் எடுப்பதில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்த, ஞாயிற்றுக்கிழமை மகளை அடித்து சித்திரவதை செய்துள்ளார். இது தொடர்பில் மகள் 119 என்ற அவசர இலக்கத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் சிறுவர், பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரியும், மற்றொரு கான்ஸ்டபிளும் சம்பவ இடத்துக்கு வந்தபோது, போதை ஆசாமி வீட்டின் கதவை பூட்டிவிட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதாக கூறி சத்தம் போட்டுள்ளார். அப்போது மகளையும் வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்தார்.

அப்போது வீட்டின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால், பொலிசார் கதவை திறக்கும்படி கூறினர். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. சிறிது நேரத்தில் வீட்டிற்குள் இருந்து அலறல் சத்தம் கேட்டது.

இதையடுத்து, பொலிசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு, சம்பந்தப்பட்ட நபர் தீப்பிடித்து எரிவதை பார்த்தனர்.

பொலிசாரை கண்டதும் அந்த நபர் உடனடியாக அவர்களை நோக்கி ஓடி வந்து சப்-இன்ஸ்பெக்டரை கட்டிப்பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டரை மீட்க சென்றபோது, கான்ஸ்டபிளுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

அந்த நபர் தனது மகளையும்  தீயில் எரிக்க முயன்றார். எனினும், பொலிசார் தலையிட்டதால் அது வெற்றயளிக்கவில்லை.

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தீக்குளித்த நபரும் வாழைச்சேனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மட்டக்களப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சிறிய காயமடைந்த மகள், வாழைச்சேனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுவனை ஏன் தாக்கினேன்?; பெண் மேற்பார்வையாளர் அதிர்ச்சி தகவல்: 14 நாள் விளக்கமறியல்!

Pagetamil

கல்முனை நன்னடத்தை பாடசாலையில் சிறுவன் மரணம்: பெண் மேற்பார்வையாளருக்கு விளக்கமறியல்!

Pagetamil

க.பொ.த சாதாரணதர பரீட்சையின் கிழக்கு மாகாண நிலவரம்!

Pagetamil

மட்டக்களப்பு 17 வயது சிறுவன் பராமரிப்பு நிலையத்தில் அடித்துக் கொலை!

Pagetamil

வடிகாலில் விழுந்து 4 வயது சிறுமி பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!