ஞாயிற்றுக்கிழமை (15) ஒருவர் தனது இளைய சகோதரனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கிருலப்பனையில் வசிக்கும் 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.
32 வயதுடைய சகோதரனைக் கைது செய்த பொலிஸார், அவர் கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் கைப்பற்றியுள்ளனர்.
உயிரிழந்தவர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைக்கு அடிமையானவர் என பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் (15) தனது தாயாரிடம் பலவந்தமாகப் பணம் வசூலித்த தம்பியின் மார்பில் கத்தியால் குத்தியுள்ளார்.
சந்தேக நபரும் இறந்தவர்களும் ஒன்றுவிட்ட சகோதரர்கள் (அவர்களுக்கு ஒரே தந்தை) என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1