எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிதியத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை அடுத்த மாதத்தில் கைச்சாத்திடப்படும் என நம்புவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், அபிவிருத்தி வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிப்பதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.
நாடு கடந்த ஆண்டை விட தற்போது வேறு இடத்தில் இருப்பதாகவும், இன்று மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என்றும் அளுத்கமகே தெரிவித்தார்.
இன்று நாட்டில் எரிவாயுவும் எண்ணெய்யும் இருப்பதாகக் கூறிய எம்.பி., 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரிசி விலை குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1