26.2 C
Jaffna
December 14, 2024
Pagetamil
இலங்கை

தியாகி திலீபன் உண்ணாவிரதத்துக்கு இடையில் கள்வியங்காடு சந்தையில் மீன் வாங்கிய அரசியல் தலைவர்!

தியாகி திலீபனின் நினைவுநாளில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர், இடையில் சந்தைக்கு சென்று மீன் வாங்கி சமைத்து சாப்பிட்டு விட்டு, மாலையில் வந்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் இளங்கலைனர் மண்டபத்தில் இன்று நடந்த நிகழ்வொன்றில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இஸ்ரேலுக்கும் காசா பகுதியில் இருக்கக்கூடிய கமாஸ் போராளிகளுக்கு இடையிலான யுத்தம் தொடர்பான செய்திகள் இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. மாறி வருகின்ற இந்த அரசியல் கள நிலைமைகள் தொடர்பாக நாங்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு நாங்கள் தெரிந்து கொண்டிருந்தால் மாத்திரம்தான் நாங்கள் சரியான முடிவுகளை வந்து சரியான நேரங்களில் எடுக்க முடியும்.

நான் என்னுடைய தரப்பில் பசுமை இயக்கத்தினுடைய நிலைப்பாடாக இரண்டு கருத்துக்களை மாத்திரம் சொல்லுகின்றேன்.

கடந்த சில வாரங்களாக என்னிடம் சிலர் கேட்ட கேள்வி- மனித சங்கிலி போராட்டத்தில் நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை, நடைபெறுகின்ற கதவடைப்பு தொடர்பாக உங்களுடைய நிலைப்பாடு என்ன. இந்த இரண்டு விடயங்கள் தொடர்பாகவும் என்னிடம் பலர் வந்து வினவி இருந்தார்கள். என்னை பொறுத்தவரையில் தமிழ் தேசியத்தை பொறுத்தவரையில் ஆறுகள் ஒருபோதும் பின்னோக்கிப் பாய்வதில்லை என்பது போல வரலாறும் ஒருபோதும் பின்னோக்கி திரும்பாது என்பதில் நான் ஆணித்தரமான கருத்தை கொண்டு இருக்கின்றேன்

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது  எந்த இடத்தில் எங்களை எந்த போராட்டம் கொண்டு வந்து நிறுத்தியது. முள்ளிவாய்க்கால் என்று சொல்லி இடத்தை குறிப்பிடவில்லை .

ஆயுதப் போராட்டம் சாத்தியமற்ற ஒரு நிலையில் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது என்பது வரலாற்றை பின்னோக்கி நகர்த்தி 30, 40 வருடங்களுக்கு புதிய ஒரு போராட்ட வழிமுறையில் இருந்து நாங்கள் மீண்டும் தொடர்வதா என்கின்ற ஒரு கேள்வி எழுகின்றது.
.
என்னை பொறுத்தவரையில் அவ்வாறு அல்ல. நாங்கள் கட்சிகளினுடைய தலைவர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் தாங்கள் போராட முன் வரவேண்டும். தாங்கள் வீதிக்கு இறங்காமல் மக்களை வீதிக்கு இறங்குமாறு கூறுவது வந்து எந்த வகையிலும் சாத்தியமில்லாதது.

நாங்கள் இதயசுத்தியாக போராடுகிறோமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. நான் இதே அரங்கில் இதனை குறிப்பிடுகின்றேன்.

நல்லூரில் திலீபனுடைய நினைவு நிகழ்விலன்று காலை வேளையில் நான் இணையதளங்களை பார்த்து, போராட்டத்தில் யார் யார் இருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டிருந்தேன். அன்று பகல் நான் கள்ளியங்காடு சந்தைக்கு சென்றிருந்த பொழுது  11 மணியளவில் அதே உண்ணாவிரத மேடையில் இருந்த ஒருஅரசியல் தலைவர் மீன் வாங்கிக் கொண்டிருந்ததை நான் கண்டேன். அன்று மாலை அதே தலைவர் அந்த உண்ணாவிரத மேடையில் இருந்து உண்ணாவிரதத்தை முடிக்கின்ற சந்தர்ப்பத்தில் இருந்ததை நான் கண்டேன்.

இங்கே இதயசுத்தியாக இல்லாமல் ஆத்ம சித்தியாக இல்லாமல் நாங்கள் முன்னெடுக்கின்ற போராட்டம் எவ்வாறு வெற்றி பெறும் என்று தான் நான் இந்த இடத்தில் கேட்க விரும்புகின்றேன்.

நாங்கள் வீதிக்கு வருவோம் மக்கள் யாவரும் கைகோர்த்து ஒருங்கிணைந்து உலகுக்கு எடுத்துக்காட்டுவதற்காக வரிக்கப்பட்ட ஒரு வடிவம் வாக்களிக்கின்றோம்

தமிழ் தேசியம் என்கின்ற அந்த ஒற்றைச் சொல்லுக்கு வாக்களிக்கின்றோம் என்கின்றதை மாத்திரம் வைத்து நாங்கள் கைநீட்டும் பக்கம் எல்லாம் மக்கள் வருவார்கள் என்று கனவு காண்பதில் விளைவுதான் மனித சங்கிலி போராட்டம். அன்றைய தினம் தோல்வியடைந்ததற்கு காரணம்- அங்கே மருதனார்மடத்திலிருந்து சத்திரச்சந்தி வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடத்துவதெனில், அத்தனை தலைவர்களும் குறைந்தபட்சம் ஆளுக்கு 100 பேரை அழைத்து வந்திருக்க வேண்டும். அப்படி அழைத்து வந்திருந்தால் அந்த மனித சங்கிலி போராட்டம் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கும். உலகத்தையும் எங்களை பார்க்க வைத்திருந்திருக்கும். நாங்கள் எங்களை மிகைப்படுத்திக் கொள்கிறோம். நாங்கள் பிரபாகரன் அல்ல. கையசைவிலும் கண்ணசைவிலும் துப்பாக்கிகளினுடைய முனையிலும் இந்த உலகத்தை கட்டிப்போடுவதற்கு நாங்கள் அவர் வழி வந்தவர்கள் அல்ல. நாங்கள் தேசியம் பேசுகின்ற போலிகள். இதனால் தான் மக்கள் எங்கள் பின்னால் வருவதற்கு தயங்குகிறார்கள்.

எங்களுடைய வேட்டிகளினுடைய தலைப்பு கூட கசங்க கூடாது என்று சொல்லி நின்று கொண்டு நாங்கள் போராட்டம் நடத்துவது சரியா என்று தான் நான் இந்த இடத்தில் கேட்க விரும்புகின்றேன்.

அடுத்தது கடையடைப்பு. அதுவும் அரசாங்கத்துக்கு எதிராக எங்களுடைய எதிர்ப்பு வடிவங்களை காட்டுவதற்கான ஒரு போராட்ட வடிவம். ஆயுதப் போராட்டம் முளை விடுவதற்கு முன்பாதாக தமிழ் தேசிய இனம் தன்னுடைய ஆரம்பக் கட்ட போராட்டமாக வடிவெடுத்துக் கொண்ட வடிவமைத்த விடயங்களில் இந்த கடையடைப்பும் உண்டு.

ஆனால் இந்த கடையடைப்பு அரசாங்கத்துக்கு சொல்லப் போகின்ற செய்தி என்ன? அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப் போகின்ற பொருளாதாரம் வீழ்ச்சி என்ன அல்லது சர்வதேசத்துக்கு நாங்கள் இதற்கு ஊடாக என்ன சொல்ல போகின்றோம்? நாங்கள் கட்சிகள் இருக்கிறோம் என்பதை மாத்திரம் தான் சொல்ல போகின்றோமா நான் இரண்டு மூன்று தினங்களாக பல இடங்களில் நான் இது தொடர்பாக விசாரித்தேன்.

நீங்கள் இந்த நாளில் உங்களுடைய பணியாளர்களுக்கு வேதனம் கொடுப்பீர்களா என்று கேட்டால், அவர்கள் சங்கடத்துடன் தான் பதிலளித்தார்கள். அவர்களுக்கான வேதனத்தை நாங்கள் கொடுக்க முடியாது என்றார்கள்.

தமிழ் தேசிய பசுமை இயக்கம் வெறுமனே மேடைகளில் அரசியல் பேசுகின்ற தேசியமாக முழங்குகின்ற ஒரு அமைப்பு அல்ல. வறுமை கோட்டுக்கு கீழ் வாழுகின்ற மக்களிடம் எங்களிடம் நெருக்கமான தொடர்பு இருக்கின்றது. அவர்கள் படுகின்ற கஷ்டங்களினுடைய வலி எங்களுக்கு தெரியும். ஒருவேளை உணவுக்கு அவர்கள் ஒரு நாள் கூலிப்பணம் கொண்டு வந்தால் மாத்திரம் தான் அவர்களின் வாழ்வு நடைபெறும்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

பெண்களுக்கு அரச அச்சுறுத்தல் – பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள்

east tamil

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

east tamil

தொடரும் சுற்றிவளைப்பு – வீழ்ச்சியடைந்த அரிசி விலை!

Pagetamil

‘சிலர் படித்தவர்கள்தான். ஆனால், புத்தி….’: அர்ச்சுனாவை பற்றி நாடாளுமன்றத்தில் போட்டுடைத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள்!

Pagetamil

Leave a Comment