உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் அதிகாரி ஒருவர் இன்று (15) காலை தெரிவித்தார்.
இதன்படி, உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் அனைத்து போட்டிகளுக்கும் குசல் மெண்டிஸ் தலைவராக இருப்பார் என அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அணித்தலைவர் தசுன் ஷானக இலங்கை அணிக்கு பாரமாக மட்டுமே இருப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. பின்னர், அவர் காயமடைந்ததாக கூறி, தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை 2023 இன் நிகழ்வு தொழில்நுட்பக் குழு, இலங்கை அணியில் தசுன் ஷானகவுக்குப் பதிலாக சமிக்க கருணாரத்னவை அங்கீகரித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1