25.5 C
Jaffna
December 1, 2023
இலங்கை

அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் மன்னார், ஊர்காவற்றுறை மற்றும் கச்சத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த  27 இந்திய பிரஜைகளை கைது செய்த இலங்கை கடற்படையினர், 5 இந்திய இழுவை படகுகளை கைப்பற்றியுள்ளனர்.

மன்னார் கடற்பரப்பிற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த 15 இந்திய மீனவர்களுடன் இரண்டு இழுவை படகுகளை கடற்படை யினர் கைது செய்தனர்.

மேலும், ஊர்காவற்றுறை மற்றும் கச்சத்தீவுக்கு அருகில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 12 இந்திய மீனவர்களுடன் மூன்று இழுவை படகுகளையும் வடக்கு கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்திய மீனவர்களும் அவர்களது மீன்பிடி இழுவை படகுகளும் தலைமன்னார் துறைமுகம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன. அவர்கள் தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகர்களிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேருந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை!

Pagetamil

2வது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

Pagetamil

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

மழை அதிகரிக்கும்!

Pagetamil

O/L பெறுபேறுகள் வெளியாகின!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!