26.3 C
Jaffna
December 10, 2024
Pagetamil
இலங்கை

மாலை அல்லது இரவில் மழை பெய்யலாம்

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியமுள்ள சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

மின்னலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை மரங்களுக்கு அடியில் தஞ்சம் அடைய வேண்டாம், வீட்டிற்குள் இருக்குமாறு எச்சரித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது திறந்தவெளி பகுதிகளான நெல் வயல்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் திறந்தவெளி நீர்நிலைகளை தவிர்க்கவும், இடியுடன் கூடிய மழையின் போது கம்பியில் இணைக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் இணைக்கப்பட்ட மின்சார உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘என்னை சேர் என்றுதான் அழைக்க வேண்டும்’: யாழ் வைத்தியசாலைக்குள் அர்ச்சுனா அட்டகாசம்!

Pagetamil

இ.போ.ச பேருந்து சேவையில் அசௌகரியம் – சிந்துஜன் கண்டனம்

east pagetamil

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

east pagetamil

கொழும்பு குற்றப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது!

Pagetamil

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த வாகனம் மோதி பெண் பலி

Pagetamil

Leave a Comment