வடமராட்சி, நெல்லியடி பொலிஸ் பிரிவில் கோயிலுக்குள் நடந்த வாள்வெட்டில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
துன்னாலை கிழக்க, குடவத்தை பகுதியில் இன்று (13) பகல் 2.30 மணியளவில் இந்த வாள்வெட்டு நடந்தது.
அங்குள்ள முருகன் கோயிலொன்றுக்குள் படுத்திருந்த 2 இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இது பழிவாங்கும் தாக்குதல் என தெரிய வந்துள்ளது.
இன்று வாள்வெட்டுக்கு இலக்கானவர், சில வாரங்களின் முன்னர் இளைஞர் ஒருவரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார். வாள்வெட்டு தாக்குதலை நடத்தியவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞனும், மற்றொருவரும் இன்று கோயிலுக்குள் படுத்திருந்த போது, ஏற்கெனவே தாக்கப்பட்டவரும், இன்னும் சிலரும் வந்து, வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஏற்கெனவே வாள்வெட்டில் ஈடுபட்டவர், கைகள், காலகள் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வாள்வெட்டு காயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.