கடி நாயிடமிருந்து தப்பியோடிய மாணவன், மதில் ஏறி குதிக்க முற்பட்ட போது, மதில் இடிந்து விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.
இன்று (13) பருத்தித்துறை, தும்பளை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
18 வயதான மாணவன் ஒருவர் கால் எலும்புகள் உடைந்து படுகாயமடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வீதியில் சென்ற இளைஞன், ஏதோ தகவல் கேட்பதற்காக வீடொன்றுக்குள் நுழைந்த போது, அங்கிருந்த கடிநாய் விரட்டியுள்ளது. நாயிடமிருந்து தப்பிக்க வீட்டு சுவர் ஏறி தப்பியோட முயன்றுள்ளார்.
இடையில் தூண் வைத்து கட்டப்படாத அந்த மதில் இடிந்து, மாணவனின் மேல் விழுந்துள்ளது.
படுகாயமடைந்த மாணவன், வீட்டு உரிமையாளரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1