இஸ்ரேலுக்குள் நுழைந்து திகைப்பூடும் தாக்குதல் நடத்திய ஹமாஸ் போராளிகள், இஸ்ரேலுக்குள்ளிருந்து சுமார் 130 பேரை பணயக்கைதியாக பிடித்து வந்திருந்தனர். அவர்களில் தாயொருவரையும், அவரது இரண்டு பிள்ளைகளையும் போராளிகள் விடுவித்துள்ளனர்.
பெண் பணயக்கைதிகள் மற்றும் இரண்டு குழந்தைகளை விடுவிப்பதைக் காட்டும் காணொளியை ஹமாஸின் கஸ்ஸாம் படையணி வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் போராளிகளாக இருக்கலாம் என்று கருதப்படும் ஆண்கள், இஸ்ரேலுக்கும் காசாவிற்கும் இடையிலான எல்லையாக இருக்கும் வேலிக்கு அருகில் உள்ள ஒரு திறந்த பகுதியில் அவர்களை விட்டுவிட்டு விலகிச் செல்லும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஹமாஸ் நிராகரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஹமாஸின் ஆயுதப் பிரிவான காசிம் பிரிகேட்ஸ் ஒரு அறிக்கையில், அந்தப் பெண் ஒரு இஸ்ரேலிய நாட்டவர் என்று கூறியது.
🚨 BREAKING
Al Jazeera: Al-Qassam brigades, military wing of Hamas, decided to let a woman and two children (taken hostage) go.
More news to follow. pic.twitter.com/3whIr30mPd— In Context (@incontextmedia) October 11, 2023