28.8 C
Jaffna
December 7, 2023
இலங்கை

டெங்கு தொற்று அதிகரிப்பு

டெங்கு நோய் பரவல் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையான 40வது வாரத்தில் 684 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், 39வது வாரத்தில் 526 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

39 வது வாரத்துடன் ஒப்பிடும்போது 40 வது வாரத்தில் 30 சதவீதம் அதிகமாகும். கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 146 டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளதுடன், மொத்த பாதிக்கப்பட்டவர்களில் 48.2% பேர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.

பிலியந்தலை, மொரட்டுவ, அத்தனகல்ல, களனி, தொம்பே, ராகம, கம்பளை, குண்டசாலை, உடுநுவர, மாத்தளை, பதுளை உள்ளிட்ட 16 பிரிவுகளை டெங்கு அபாய பிரதேசங்களாக சுகாதார வைத்திய அதிகாரிகள் அடையாளம் காண்டுள்ளனர். இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் இதுவரை 65,479 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், அது டெங்குவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உடனடியாக தகுதியான மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

நுளம்புகள் பெருக முடியாதவாறு சுற்றுச்சூழலை பேணுவதன் மூலம் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் இதனால் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அத்துமீறிய 22 இந்திய மீனவர்கள் கைது

Pagetamil

தெல்லிப்பளை வாள்வெட்டு சம்பவம்: 3 ரௌடிகள் கைது!

Pagetamil

விபத்தில் 2 பேர் பலியான சம்பவத்தில் பேருந்து சாரதிக்கு 12 வருட கடூழிய சிறை!

Pagetamil

முன்னாள் டிஐஜி நாலக சில்வா விடுதலை!

Pagetamil

கல்கிசை நீதவானை சாட்சியமளிக்க முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!