2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வருடம் நவம்பரில் நடக்கவிருந்த உயர்தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி ஜனவரி 31 ஆம் திகதி நிறைவடையும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி 22 பாடங்களுக்கான பரீட்சைகள் 22 நாட்கள் நடைபெறும்.
முதல் நாளில், ஒருங்கிணைந்த கணிதம், உயிரியல், பொருளாதாரம் மற்றும் சமயம் ஆகிய பாடங்களுக்கான பரீட்சைகள் நடக்கும்.
2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்கள் இன்னும் 2023 உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022 A/L பரீட்சை முடிவுகள் செப்டம்பர் 4 ஆம் திகதி வெளியிடப்பட்டன.
பரீட்சைக்கு தோற்றுவதற்கு மாணவர்களின் கட்டாய வருகை 80 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
A/L க்கான விண்ணப்பங்களை https://onlineexams.gov.lk/eic ஊடாக சமர்ப்பிக்க வேண்டும்.