28.8 C
Jaffna
December 7, 2023
இலங்கை

வவுனியா விபத்தில் பெண் பலி

வவுனியா, பம்பைமடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (10) வவுனியா, குருக்கல், புதுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பம்பைமடு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குருக்கல் புதுக்குளத்தை சேர்ந்த 44 வயதுடைய 4 பிள்ளைகளின் தாயாரான விஜயரத்தினம் ஜெயந்தினி என்பவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது இவருடன் பயணித்த இவரது மகன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்திற்குள் வவுனியாவில் ஏற்பட்ட இரு வேறு விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் இரு விபத்துமே கட்டாக்காலி மாடுகளினால் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

அத்துமீறிய 22 இந்திய மீனவர்கள் கைது

Pagetamil

தெல்லிப்பளை வாள்வெட்டு சம்பவம்: 3 ரௌடிகள் கைது!

Pagetamil

விபத்தில் 2 பேர் பலியான சம்பவத்தில் பேருந்து சாரதிக்கு 12 வருட கடூழிய சிறை!

Pagetamil

முன்னாள் டிஐஜி நாலக சில்வா விடுதலை!

Pagetamil

கல்கிசை நீதவானை சாட்சியமளிக்க முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!