சர்வதேச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களின் மருத்துவ பட்டப் படிப்புகளை இலங்கையில் அங்கீகரிப்பது தொடர்பான சட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டப் படிப்புகளை இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அடிப்படையான தரநிலைகள் மற்றும் அளவுகோல்களை உள்ளடக்கிய தேசிய கொள்கையை உருவாக்குவதற்கும் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப மருத்துவ கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளை திருத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்கும் முன்னதாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழுவை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையின் அடிப்படையில், சர்வதேச தரவரிசையின்படி,1 முதல் 1000 வரையிலான வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மருத்துவப் பட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட கூட்டுப் பிரேரணை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.