27.6 C
Jaffna
November 29, 2023
இலங்கை

இம் மாதம் முதல் மின் கட்டணம் உயரும் சாத்தியம்!

மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் முதல் மின் கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கும் சாத்தியம் உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (10) தெரிவித்தார்.

கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நாள் முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்த அதிகாரி, பொதுப் பயன்பாட்டுச் சட்டத்தின்படி மக்களின் கருத்துகளைப் பெற 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இம்மாதம் 18ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் மக்களிடம் வாய்மூலம் கருத்துக்களை பெற்றுக்கொள்ள சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரி, அதன் பின்னரே அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காங்கேசன்துறையில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தி, தொடரும் இரும்பு திருட்டு

Pagetamil

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலை கண்டிக்கிறது யாழ் ஊடக அமையம்!

Pagetamil

யாழ் யுவதி கடத்தப்பட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை: மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 இராணுவத்தினர் விடுதலை!

Pagetamil

மஹிந்த பயணித்த வாகனத்தின் மீது விழுந்த வீதித்தடுப்பு!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!