ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அமைச்சர் நஸீர் அஹமட் நீக்கப்பட்ட தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தனது கட்சி உறுப்புரிமையை பறித்தமைக்கு எதிராக நசீர் அஹமட் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதன்படி இந்த மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அமைச்சர் நஸீர் அஹமட் நீக்கப்பட்ட தீர்மானம் சட்டபூர்வமானது என்ற உத்தரவை இன்று (06) அறிவித்தது.
அரசு பக்கம் தாவி அமைச்சு பதவியேற்றதை தொடர்ந்து நஸீர் அஹமட்டை முஸ்லிம் காங்கிரஸ் நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1