27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil
ஆன்மிகம்

இந்தவார ராசி பலன் (6.10.2023 – 12.10.2023)

சுக்கிரன், சூரியன், புதன் நன்மைகளை வழங்குவர். நவகிரகத்தில் உள்ள செவ்வாய் பகவானை வணங்கி வழிபட வளம் உண்டாகும்.

அசுவினி : இதுவரை இருந்த நெருக்கடி ஒவ்வொன்றாக விலகும், வாழ்க்கையில் புதிய பாதை தெரியும். உங்கள் நட்சத்திர நாதன் கேது ஞாயிறு முதல் ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் அடையும், வழக்கு உங்களுக்கு சாதகமாகும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

பரணி : உங்கள் நட்சத்திர நாதன் ஐந்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் செய்துவரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பண நெருக்கடி விலகும். ஞாயிறு முதல் ராகு பகவான் ராசியை விட்டு விலகுவதால் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களின் செல்வாக்கு உயரும்.

கார்த்திகை 1ம் பாதம் : வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். புதிய முயற்சி வெற்றியடையும், ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் உங்கள் நட்சத்திர நாதனால் ஆற்றல் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வாரம் இது.

சுக்கிரன், செவ்வாய், ராகு நன்மைகளை வழங்குவர். நவக்கிரகத்தில் உள்ள கேதுவிற்கு சிவப்பு மலர் சார்த்தி வணங்கி வழிபட்டு வர சங்கடம் தீரும்.

கார்த்திகை 2,3,4 : உங்கள் வாழ்க்கையில் இருந்த நெருக்கடி நீங்கும். ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். மற்றவர்களால் ஏற்பட்ட தொல்லை விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும், வரவு அதிகரிக்கும். புதிய முயற்சி லாபமாகும். எதிர்பார்த்த ஆதாயம் வரும்.

ரோகிணி : வாரம் முழுவதும் உங்கள் நட்சத்திர நாதன் உங்களுக்கு சாதகத்தை வழங்கிடும் நிலையில் ஞாயிறு முதல் ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் நெருக்கடி விலகும். பொருளாதாரத்தில் இருந்த தடை விலகும். வீண் செலவு கட்டுப்படும். ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்பு விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

மிருகசீரிடம் 1,2 : கடந்த வாரத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். மனக்காரகனின் அருளால் செயல்களில் முன்னேற்றம் தோன்றும். ஆறாமிட செவ்வாயால் உடலில் இருந்த சங்கடம் நீங்கும். எதிர்ப்பு விலகும். வழக்குகளில் இருந்து வெளியில் வருவீர்கள். லாப ஸ்தான ராகுவால் வரவு அதிகரிக்கும்.

சுக்கிரன், புதன், நன்மைகளை வழங்குவார்கள். உலகளந்த பெருமாளை வணங்கி வழிபட்டு வர வளமுண்டாகும்.

மிருகசீரிடம் 3,4 : லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் வக்கிரம் பெற்றிருப்பதும், ஞாயிறு அன்று நடைபெற உள்ள ராகு கேது பெயர்ச்சியும் உங்களுக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதால் எந்தவொரு செயலிலும் கவனம் தேவை.

திருவாதிரை : வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் உங்கள் விருப்பம் நிறைவேறும், திங்கள் முதல் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும்.

புனர்பூசம் 1,2,3 : மூன்றாமிட சுக்கிரனும் நான்காமிட புதனும் உங்கள் எதிர் பார்ப்புகளை நிறைவேற்றுவார். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். புதிய செயல்களில் ஆதாயம் ஏற்படும். திட்டமிட்ட செயல் நடந்தேறும். புதிய பொன் பொருட்கள் வாங்குவீர்கள்.

சுக்கிரன், சூரியன், கேது நன்மைகளை வழங்குவர். நவகிரகத்தில் உள்ள சனி பகவானுக்கு சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர சங்கடம் விலகும்.

புனர்பூசம் 4 : வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் செலவு அதிகரிக்கும். ஞாயிறு அன்று நடைபெற உள்ள ராகு கேது பெயர்ச்சியில் மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் தைரியத்தை அதிகரிப்பார். முயற்சிகளில் வெற்றியை உண்டாக்குவார்.

பூசம் : நீண்ட நாள் பிரச்னை முடிவிற்கு வரும். மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் உங்கள் தனாதிபதியால் விருப்பம் நிறைவேறும். முயற்சி வெற்றியாகும், அரசு வழியில் ஏற்பட்ட சிக்கல் விலகும்.

ஆயில்யம் : உங்கள் எதிர்பார்ப்பு இந்த வாரத்தில் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும். உத்தியோகஸ்தர்களின் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் எண்ணம் பூர்த்தியாகும். வெளிநாட்டிற்கு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சி நிறைவேறும்.

சுக்கிரன், புதன், செவ்வாய் நன்மைகளை வழங்குவர். காலையில் எழுந்தவுடன் சூரியனை தரிசித்து வணங்கி வழிபட்டு வர வாழ்க்கையில் ஒளி பிறக்கும்.

மகம் : மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் முயற்சி வெற்றியாகும். தடைபட்டிருந்த வேலை நடந்தேறும். எதிர்பார்த்த வருமானம் வரும், தொழில் உத்தியோகத்தில் மகிழ்ச்சியான நிலை ஏற்படும். ஞாயிறு திங்களில் செலவு அதிகரிக்கும்.

பூரம் : ஜென்மத்தில் சஞ்சரிக்கும் உங்கள் நட்சத்திர நாதனால் பண வரவு அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவீர். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சிகளில் லாபம் ஏற்படும். எதிர்பார்த்த வருமானம் வரும். புதிய முயற்சி வெற்றியாகும். திங்கள் அன்று செலவில் கவனம் தேவை.

உத்திரம் 1 : உங்கள் ராசி நாதன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன், ஞாயிறு முதல் கேது பகவானும் அங்கே சஞ்சரிப்பதால் அரசு வழியில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். குடும்பத்தில் சலசலப்பு தோன்றும். கவனமுடன் செயல்பட வேண்டிய வாரமிது.

சந்திரன், சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். விநாயகரை வழிபட சங்கடம் தீரும்.

உத்திரம் 2,3,4 : பெரும்பாலான கிரகம் எதிர்மறையாக சஞ்சரித்தாலும் சந்திர பகவானால் நன்மை அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். ஜென்ம ஸ்தானத்தில் ஞாயிறு முதல் கேதுவும் சஞ்சரிக்க இருப்பதால் எச்சரிக்கை அவசியம்.

அஸ்தம்: உங்கள் ராசியாதிபதி ஜென்ம ராசிக்குள்ளாகவே சஞ்சரிப்பதால் சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். நெருக்கடி விலகும், உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். முயற்சிகளில் லாபம் உண்டாகும. வருமானம் அதிகரிக்கும்.

சித்திரை 1,2: வாரத்தின் முதல் நான்கு நாட்களும் சந்திரனால் உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் சாதுரியமாக செயல்பட்டு சிறப்படைவீர். செவ்வாய் புதனில் செலவு அதிகரிக்கும்.

சுக்கிரன், ராகு நன்மையை வழங்குவர். நவக்கிரகத்தில் உள்ள ராகுவிற்கு நீல நிற வஸ்திரம் சார்த்தி வணங்கி வழிபட வளமுண்டாகும்.

சித்திரை 3,4: ஞாயிறு அன்று நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருப்பதால், தடைபட்டிருந்த வேலை நடைபெறத் தொடங்கும். எதிர்பார்த்த லாபம் வரும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.

சுவாதி : கடந்த கால சங்கடம் நீங்கும். வாரம் முழுவதும் சந்திரனும், சுக்கிரனும் உங்கள் செயல்களில் லாபத்தை உண்டாக்குவர். ஞாயிறு முதல் ராகு ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் முயற்சி பலிக்கும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.

விசாகம் 1,2,3 : ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாயால் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். செயல்களில் வேகமும் விறு விறுப்பும் இருக்கும். சத்ரு இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் உங்கள் செல்வாக்கு உயரும். சங்கடம் தீரும். எதிர்ப்பு விலகும், வருமானம் அதிகரிக்கும்.

புதன், ராகு, கேது நன்மைகளை வழங்குவர். திருச்செந்துார் முருகனை வழிபட வளமுண்டாகும்.

விசாகம் 4 : லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் உங்கள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிரிகள் விலகிச் செல்வர். அரசு வழியிலான முயற்சி அனுகூலமாகும்.

அனுஷம் : வாரத்தின் முதல்நாளில் சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் கவனம் தேவை. உங்கள் ராசிநாதன் விரய இடத்தில் சஞ்சரிப்பதால் ஒரு சிலருக்கு ஸ்திர சொத்துகளை விற்க வேண்டிய நிலை ஏற்படும். லாப ஸ்தான சூரியனால் நெருக்கடி விலகும்.

கேட்டை : தொழிலில் அக்கறை அதிகரிக்கும். வருமானத்தில் இருந்த தடை விலகும். ஞாயிறு முதல் கேது லாப இடத்திற்கு செல்வதால், நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். தடைபட்டிருந்த செயல் நடந்தேறும். சனிக்கிழமை அன்று செயல்களில் சிரமம் தோன்றும்.

சந்திராஷ்டமம்: 5.10.2023 மதியம் 11:52 மணி – 7.10.2023 இரவு 9:11 மணி

சுக்கிரன், சூரியன், புதன், செவ்வாய் நன்மைகளை வழங்குவர். சக்கரத்தாழ்வாரை வழிபட சங்கடம் தீரும்.

மூலம் : ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பாக்கியாதிபதியால் திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். எதிர்ப்பு விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஞாயிறு அன்று சந்திராஷ்டமம் என்பதால் எச்சரிக்கை அவசியம்.

பூராடம் : பத்தாமிட சூரியனும் லாபஸ்தான செவ்வாயும் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்கள். அரசு உத்தியோகஸ்தர்கள், அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். ஒரு சிலர் புதிய இடம் வாங்குவீர்கள். திங்கள் அன்று சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் கவனம் தேவை.

உத்திராடம் 1 : நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். சுறு சுறுப்பாக செயல்பட்டு உங்கள் வேலைகளை முடிப்பீர். வேலை வாய்ப்பிற்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். திங்கள் செவ்வாய் அன்று விழிப்புணர்வு அவசியம்.

சந்திராஷ்டமம்: 7.10.2023 இரவு 9:12 மணி – 10.10.2023 காலை 8:23 மணி

ராகு நன்மைகளை வழங்குவார். துர்க்கையை வழிபடுவதால் சங்கடம் நீங்கும்

உத்திராடம் 2,3,4 : பெரும்பாலான கிரகம் உங்களுக்கு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் ஞாயிறு முதல் ராகு பகவான் மூன்றாமிடத்தில் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் முயற்சி வெற்றியாகும், செயல்கள் லாபமாகும். செவ்வாய் அன்று சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் கவனம் அவசியம்.

திருவோணம் : உங்கள் ராசிக்குள் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் செயல்களில் கவனம் தேவை. மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் முயற்சி வெற்றியாகும். துணிச்சலுடன் செயல்படுவீர். எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். புதன் வியாழன் அன்று சில நெருக்கடி தோன்றும்.

அவிட்டம் 1,2 : பாக்கிய ஸ்தான சூரியன், ஜீவன ஸ்தான செவ்வாயால் செயல்களில் விழிப்புணர்வு அவசியம்.
வியாபாரத்தில் புதிய முயற்சி இப்போது வேண்டாம். முதலீடுகளில் கூடுதல் கவனம் தேவை. வியாழன் அன்று கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: 10.10.2023 காலை 8:24 மணி – 12.10.2023 இரவு 8:01 மணி

சந்திரன், சுக்கிரன், புதன் நன்மைகளை வழங்குவர். நவக்கிரக வழிபாடு சங்கடம் போக்கும்.

அவிட்டம் 3,4 : பெரும்பாலான கிரகம் எதிர்மறையாக சஞ்சரிக்கும் நிலையில் ஞாயிறு அன்று நடைபெறும் ராகு கேது பெயர்ச்சியும் உங்களுக்கு சாதகத்தை உண்டாக்காது என்பதால் செயல்களில் அதிகபட்ச கவனம் தேவை. வியாழன் அன்று சில சங்கடம் தோன்றும்.

சதயம் : இதுவரையில் துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வந்த உங்கள் நிலையில் இந்த வாரம் மாற்றம் உண்டாகும். மூன்றாமிடத்தில் சஞ்சரித்து நன்மை வழங்கி வந்த ராகு இடம் பெயர்வதால் உங்கள் முயற்சியில் இழுபறிநிலை அதிகரிக்கும்.

பூரட்டாதி 1,2,3 : அரசு வழியில் சில நெருக்கடி தோன்றும் என்பதால் கணக்கு வழக்கில் கவனம் தேவை. ஞாயிறு முதல் அஷ்டம ஸ்தானத்திற்கு கேது செல்வதால் எதிரிகளின் கை மேலோங்கும். உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம்.

சந்திராஷ்டமம்: 12.10.2023 இரவு 8:02 மணி – 15.10.2023 காலை 6:25 மணி

சந்திரன் நன்மையை வழங்குவார். வராகியை வழிபட சங்கடம் குறையும்.

பூரட்டாதி 4 : பெரும்பாலான கிரகம் எதிர்மறையாக சஞ்சரிக்கும் நிலையில் ஞாயிறு முதல் ராகு பகவான் உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்க இருப்பதால் மனதில் குழப்பம் அதிகரிக்கும், வாழ்க்கைத் துணையுடன் சங்கடம் தோன்றும். கவனமாக செயல்படுவதால் சங்கடம் குறையும்.

உத்திரட்டாதி : உங்கள் ராசிநாதன் குடும்ப ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருப்பதால் பணவரவு தடைபடும், குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும் எட்டாமிடத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் பயணத்தில் எச்சரிக்கையும், செயல்களில் விழிப்புணர்வும் அவசியம்.

ரேவதி : உங்கள் முயற்சி எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு நன்மைகளை அடைவீர். ஜென்ம ராசிக்குள் ராகு, ஏழில் கேது, சூரியன், எட்டில் செவ்வாய் என்ற நிலையால் எதிர்பாராத சங்கடங்களும் நெருக்கடிகளும் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் கவனமும், பயணத்தில் எச்சரிக்கையும் அவசியம்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
4
+1
3
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

Pagetamil

நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

Pagetamil

நல்லூர் திருவிழா: காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Pagetamil

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா

Pagetamil

மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 – குரோதி வருடம் எப்படி?

Pagetamil

Leave a Comment