27.2 C
Jaffna
December 5, 2023
இந்தியா

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்

நாகை மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தி, மீன்கள், வலை உள்ளிட்ட ரூ.5 லட்சம் பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த செருதூரைச் சேர்ந்தவர் சக்திபாலன் (24). இவர், தனது பைபர் படகில், செருதூரைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (25), சூர்யா (19), சிரஞ்சீவி (20), புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த கண்ணன் (20) ஆகியோருடன் செப்டெம்பர் 24ஆம் திகதி காலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்.

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று முன்தினம் இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 2 அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, செருதூர் மீனவர்களின் படகில் ஏறி, கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் மீனவர்களை தாக்கினர். பின்னர், அவர்களை மிரட்டி, 550 கிலோ வலை, 100 கிலோ மீன்கள், வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, பேட்டரி, டார்ச் லைட் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதில் காயமடைந்த சக்திபாலன் உள்ளிட்ட 5 மீனவர்களும் நேற்று காலை செருதூர் கடற்கரைக்கு திரும்பினர். அவர்களை மீனவக் கிராம பஞ்சாயத்தார் நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

23ஆம் திகதி செருதூர் மீனவர்கள் தாக்கப்பட்ட நிலையில், மீண்டும் கடற்கொள்ளையர்களால் செருதூர் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், இந்திய கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘மிக்ஜாம்’ புயலால் வரலாறு காணாத அடைமழை: ஸ்தம்பித்தது சென்னை

Pagetamil

விராட் கோலியின் உணவகத்திற்கு வேட்டி அணிந்து சென்ற தமிழருக்கு அனுமதி மறுப்பு!

Pagetamil

4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு

Pagetamil

‘சனாதனத்தை பழித்ததன் விளைவு’: முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்

Pagetamil

மதுரை அலுவலகத்தில் சோதனை நடத்தியது சட்டவிரோதம்: டிஜிபி அலுவலகத்திடம் அமலாக்கத் துறை புகார்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!