27.2 C
Jaffna
December 5, 2023
இலங்கை

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிசு மரணம், மனைவியின் கர்ப்பப்பை அகற்றம்: கணவர் பொலிஸ் முறைப்பாடு!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தனது மனைவிக்கு சக்திரசிகிச்சையின் மூலம் இறந்த குழந்தை எடுக்கப்பட்டதுடன், மனைவியின் கருப்பையும் அகற்றப்பட்டதற்கு மருத்துவ தவறே காரணமென குறிப்பிட்டு, கணவர் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி குழந்தை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தனது மனைவிக்கு 27ஆம் திகதி சத்திர சிகிச்சை மூலம் இறந்த நிலையில் குழந்தை எடுக்கப்பட்டதோடு, தனது மனைவியின் கருப்பையும் அகற்றப்பட்டுள்ளது. இது மருத்துவ தவறுகளின் காரணமாக இடம்பெற்றது என முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தனது குழந்தை வயிற்றுக்குள்ளே இறப்பதற்கும், தனது மனைவியின் கருப்பை
அகற்றப்படுவதற்கும் மருத்துவர்களின் தவறே காரணம் எனவும் தனது
வாழ்க்கையில் இனி குழந்தை பாக்கியமே இல்லாத நிலைமைக்கு தனது குடும்பத்தை
தள்ளிவிட்டார்கள் என்றும் தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன்
மேற்படி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஷானி அபேசேகரவை வாகன விபத்தில் கொலை செய்ய சதித்திட்டம்!

Pagetamil

காசாவில் வந்தால் இரத்தம்… தமிழர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?: இலங்கை முஸ்லிம்களிம் கேட்கிறார் சபா.குகதாஸ்!

Pagetamil

வவுனியாவில் கொடூரமாக தாக்கிய ஆசிரியர்: உயர்தர மாணவி தப்பியோட்டம்!

Pagetamil

யாழில் பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம்: வாள்வெட்டுக்குழு தப்பியோட்டம்!

Pagetamil

யாழ், நல்லூரில் டெங்கை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!