நீதிபதியின் தனிப்பட்ட காவலராக கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று இரவு மதுபோதையில் 21 சட்டவிரோத மதுபான போத்தல்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற போது அலவ்வ பொலிஸ் உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்டார்.
வரக்காபொல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒரு கான்ஸ்டபிள் ஆவார். கடமைக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியும் அவரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்காக அலவ்வ பொலிஸாரால் அமைக்கப்பட்ட அவசர வீதித் தடுப்பில் மோட்டார் சைக்கிளை பரிசோதித்த போது பொலித்தீன் பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 21 சட்டவிரோத மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவர் வரக்காபொல நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1