26.7 C
Jaffna
December 10, 2024
Pagetamil
உலகம்

கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா ஆர்மேனியா?: ‘மேற்குடன் ஊர்சுற்றினால் இதுதான் நடக்கும்’- ரஷ்யா எச்சரிக்கை!

நாகோர்னோ-கராபாக் மீதான அஜர்பைஜானின் வெற்றிக்கு ஆர்மேனியப் பிரதமர் நிகோல் பஷினியன் தான் காரணம் என்று ரஷ்யா கூறியுள்ளது.

அவர் சமாதானத்திற்காக ரஷ்யா மற்றும் அஜர்பைஜானுடன் பணியாற்றுவதை விட மேற்கு நாடுகளுடன் ஊர்சுற்றுவதை விரும்பியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆர்மேனியப் பிரதமர் நிகோல் பஷினியன் ஞாயிற்றுக்கிழமை தேசத்திற்கு ஆற்றிய உரையில், பிரிந்த பிராந்தியமான நாகோர்னோ-கராபாக் நெருக்கடியைத் தவிர்க்க ரஷ்யா அதிக உதவிகளை வழங்காததன் மூலம் ஆர்மீனியாவைத் தோல்வியடைய வைத்ததாகவும், ஆர்மீனியாவின் பாதுகாப்பு கூட்டணிகள் பலனற்றவையென்றும், அவற்றை மாற்ற வேண்டும் என்று கூறினார்.

ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சு பாஷினியன் மீது கடுமையான வார்த்தைகளால் தாக்கியுள்ளது.

மேற்குலகின் புவிசார் அரசியல் விளையாட்டுகளுக்கு நாட்டைப் பணயக்கைதியாக்கும் அதே வேளையில், ரஷ்யாவுடனான ஆர்மீனியாவின் பலதரப்பட்ட மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான உறவுகளை வேண்டுமென்றே அழிக்க முயற்சிப்பதன் மூலம் ஆர்மேனிய தலைமை பாரிய தவறைச் செய்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அது கூறியது.

அஜர்பைஜான் கடந்த வாரம் மின்னல் தாக்குதலில் கராபக்கைக் கைப்பற்றியது.  கராபக் தமது தாயகம் என்று குறிப்பிடும் ஆயிரக்கணக்கான ஆர்மேனியர்கள் அங்கிருந்து தப்பி, ஆர்மேனியாவுக்கு சென்றனர். கராபக்கில் வாழும் சுமார் 120,000 ஆர்மேனியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக அஜர்பைஜான் உறுதியளித்துள்ளார், ஆனால் பலர் அதன் உறுதிமொழிகளை ஏற்க மறுக்கின்றனர்.

கராபக் சர்வதேச அளவில் அஜர்பைஜான் பிரதேசமாக பார்க்கப்படுகிறது.

பிராந்தியத்தில் சுமார் 2,000 அமைதி காக்கும் படையினரைக் கொண்டுள்ள ரஷ்யா, “மொஸ்கோ மீது பழியை மாற்றுவதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட தோல்விகளுக்கான பொறுப்பிலிருந்து ” பஷினியன் தன்னைத் தானே விடுவிக்க முயற்சிப்பதாகக் கூறியது.

கூட்டணிகளை மாற்றுவது பற்றிய பாஷினியனின் கருத்துக்கள், மொஸ்கோவுடனான ஆர்மீனியாவின் கூட்டணியில் இருந்து மேற்கு நோக்கி நகர்வதற்கு அவர் தயாராகி வருவதைக் குறிக்கிறது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கராபக் நெருக்கடியைத் தீர்க்க பஷினியன் “ரஷ்யா மற்றும் அஜர்பைஜானுடன் இணைந்து வேலை செய்வதிலிருந்து விலகி மேற்கு நோக்கி ஓடினார்” என்றும் ஆர்மேனிய அதிகாரிகள் ஊடகங்களில் ரஷ்ய எதிர்ப்பு வெறியைத் தூண்டியதாகவும் ரஷ்யா கூறியது.

ஆர்மேனிய தலைநகர் யெரெவனில் நடந்த எதிர்ப்புக்களில் தனக்கு எந்தப் பாதிப்பும் இல் இல்லையென்றும்,  ரஷ்யா புரட்சிகளைத் தூண்டவில்லை என்றாலும், மேற்குலகம் செய்தது என்று பாஷினியனை எச்சரித்தது.

“வண்ணப் புரட்சிகளை” ஒழுங்கமைப்பதில் மிகவும் திறமையான மேற்கு நாடுகளைப் போலன்றி, மொஸ்கோ இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடாது என்பதை ஆர்மேனிய அரசாங்கத்தின் தலைவர் நன்கு அறிந்திருக்க வேண்டும்” என்று ரஷ்யா கூறியது.

உக்ரைன் உட்பட பல சோவியத்துக்குப் பிந்தைய குடியரசுகளில் வண்ணப் புரட்சிகள் என்று அழைக்கப்படுவதைத் தூண்டியதற்காக அமெரிக்காவை ரஷ்யா குற்றம் சாட்டுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

east pagetamil

சிரியா ஜனாதிபதி மொஸ்க்கோவில் தஞ்சம்

east pagetamil

14 வயது சிறுவனால் வரையப்பட்ட ஓவியம் – கவிழ்க்கப்பட்டது சிரியா ஆட்சி

east pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

சிரிய ஜனாதிபதியின் கதி என்ன?

Pagetamil

Leave a Comment