கிளிநொச்சி கோணாவில் பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரின் சடலம்
ஊற்றுப்புலம் கிராமத்தின் நாற்சந்தியில் காணப்பட்டுள்ளது.
குறித்த இளைஞனின் சடலம் நேற்றிரவு (25) ஒன்பது மணிக்கு பின்னர் குறித்த
சந்தியில் பொது மக்களால் அவதானிக்கப்பட்டு உடனடியாக பொலீஸாருக்கு
அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்று பொலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சடலத்தை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இச் சம்பவத்தில் கிளிநொச்சி கோணாவில் கிராமத்தைச்சேர்ந்த முப்பது வயது
மதிக்கத்தக்க புஸ்பராசா தினேஸ்கரன் என்பவரே கொல்லப்பட்டு்ளளதாக பொது
மக்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
1
+1
+1