மன்னார் தாராபுரன் பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய நபரொருவரே 2,07,000 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டதாக மன்னார் பொலிசார் தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட மாத்திரைகளின் பெறுமதி ரூ.3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
தள்ளாடி இராணுவமுகாம் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இளைஞன் கைது செய்யப்பட்டதுடன், தாழ்வுப்பாடு காட்டுப்பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.
சந்தேக நபருக்கு போதை மாத்திரைகளை கொண்டு வந்து வழங்கிய நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மன்னார் பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1