இன்றைய வானிலை

Date:

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடமேல் மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.

இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பரந்தன்- முல்லை வீதி இந்திய பாலத்தில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை!

பரந்தன் முல்லைத்தீவு வீதியிலுள்ள இல. 11/1 (இந்தியன் பாலம்) பாலத்தினூடாக கனரக...

புகையிரத திணைக்கள வேலைநிறுத்தம் வாபஸ்

நேற்று நள்ளிரவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த லோகோமோட்டிவ் இயக்க பொறியாளர்கள் சங்கத்தால் திட்டமிடப்பட்ட...

‘இதற்கு சட்டத்தில் இடமில்லை’: இரண்டு பொலிசாரையும் பிணையில் விடுவித்த நீதிமன்றம்!

பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கும், ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்கும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்