27.7 C
Jaffna
September 22, 2023
சினிமா

நடிகை கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்தார் அசோக் செல்வன்

நடிகர் அசோக் செல்வன் – நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் திருநெல்வேலியில் இன்று (13) நடைபெற்றது.

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ‘சூது கவ்வும்’ படத்தில் நடிக்கத் தொடங்கிய அசோக் செல்வன், ‘ஓ மை கடவுளே’, ‘நித்தம் ஒரு வானம்’ உட்பட பலவேறு படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடித்து வெளியான ‘போர்தொழில்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நடிகர் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். கீர்த்தி பாண்டியன் தும்பா, அன்பிற்கினியாள் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இந்நிலையில, இவர்கள் திருமணம் இன்று (13 )திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் நடந்து முடிந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பின்னர் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விஜய்யின் ‘லியோ’ இந்தி போஸ்டர் வெளியீடு

Pagetamil

‘அவளுடன் நானும் இறந்துவிட்டேன்’: விஜய் ஆண்டனி உருக்கமான அறிக்கை!

Pagetamil

நாக சைதன்யா ஜோடியாக சாய் பல்லவி

Pagetamil

தீபாவளிக்கு வெளியாகிறது துருவநட்சத்திரம்

Pagetamil

அமீர்கான் தம்பி ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சாய் பல்லவி?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!