மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகளுக்காக களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த 50 கிலோகிராம் கஞ்சா காணாமல் போய் உள்ளதாக தெரிவித்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற பதிவாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தெல்லிப்பழை பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 6ஆம் திகதி நீதிமன்ற பதிவாளர் விடுமுறையில் சென்றுள்ளார். மீண்டும் 10ஆம் திகதி பணிக்கு திரும்பி உள்ளார். வழக்கு சான்று பொருள் உள்ள அறையை பரிசோதனை செய்தபோது 50 கிலோகிராம் கஞ்சா காணாமல் போயிருந்தமை தெரிய வந்தது. இதனை அடுத்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1