27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இலங்கை

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் துப்பாக்கி ரவை, ரஷ்யாவின் நீர் சுத்திகரிப்பு கருவி மீட்பு!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் 6ஆம் நாள் அகழ்வாய்வு செப்ரெம்பர் (12) இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், கழிவு நீரை சுத்திகரித்து அருந்துவதற்கு பயன்படுத்தப்படும், ரஷ்யத் தயாரிப்பு நீர் சுத்திகரிப்புக் கருவி ஒன்றும், துப்பாக்கி ரவை ஒன்றும் தடயப் பொருட்களாகப் பெறப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு 6 நாட்கள் இடம்பெற்றுள்ள நிலையில், 6 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (6) புதனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

6ஆம் நாள் அகழ்வாய்வுகள் இன்று (12) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது.

அதேவேளை குறித்த அகழ்வாய்வுகளில் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, தடயவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

அகழ்வாய்வுகள் தொடர்பில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா கருத்துத் தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் 6வது நாள் அகழ்வாய்வில் ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதி முற்றுமுழுதாக அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்ததுடன், செப்ரெம்பர் (11) திங்களன்று பகுதியளவில்அகழந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதியின் மிகுதிப் பாகங்களும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன.

அத்தோடு 6ஆம் நாள் அகழ்வாய்வில் துப்பாக்கி ரவை ஒன்றும், கழிவு நீரை சுத்திகரித்து அருந்துவதற்கு பயன்படுத்தப்படும், ரஷ்யத் தயாரிப்பு நீர் சுத்திகரிப்புக் கருவி ஒன்றும் தடயப் பொருட்களாக பெறப்பட்டுள்ளன.

அதேவேளை இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்படும் மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்கள் கட்டப்பட்ட நிலையிலேயோ, கைகள் கட்டப்பட்ட நிலையிலேயோ மீட்கப்படவில்லை.

இந்த அகழ்வாய்வுப் பணிகள் இடம்பெறும்போது காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சார்பில், இரண்டு சட்டத்தரணிகள் அகழ்வாய்வுகள் ஆரம்பமாகி முடிவடையும்வரை நேரடியாக நின்று பார்வையிடுகின்றனர்.

இதனைவிட தடயவியல் பொலிசார் அகழ்வுப்பணிகளின்போது புகைப்படங்களை எடுத்து ஆவணப்படுத்துகின்றனர்.

இவ்வாறான சூழலில் இங்கு அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கைகள் கட்டப்பட்டநிலையில் எலும்புக்கூட்டுத் தொகுதிகளோ, கண்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட துணிகளோ இனங்காணப்படவில்லை என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலிங்கநகரில் இளைஞர் வள நிலையம் திறப்பு

east pagetamil

படகு கவிழ்ந்து ஒருவர் பலி மட்டக்க்களப்பில் சோகம்

east pagetamil

இணைப்பேராசிரியர் ரிச்சர்ட் பிரியோ நூலக நிறுவனத்துக்கு வருகை

east pagetamil

‘பைத்தியக்காரன் அர்ச்சுனாவை வெளியேற்றுங்கள்’: யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சலசலப்பு!

Pagetamil

யாழ் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்!

Pagetamil

Leave a Comment