Site icon Pagetamil

கிளிநொச்சியில் உயர்தர மாணவி மாயம்!

கிளிநொச்சியில் மாணவியொருவரை காணவில்லையென, அவரது குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கிளிநொச்சி, மலையாளபுரத்தை சேர்ந்த புவனேஸ்வரன் ஆர்த்தி என்ற மாணவியே மாயமாகியுள்ளார்.

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் 2023(கலை) உயர்தர பிரிவில் கல்வி பயின்று மாணவி, கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் இவரை ாணவில்லையென பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அல்லது இவரை இலங்கையின் எப்பிரதேசத்திலாவது கண்டவர்கள் இருந்தால் உடனடியாக 0774941522. 0772144553 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தனக்கு தகவல் தருமாறு தந்தை கோரியுள்ளார்.

 

Exit mobile version