ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட உண்மைகளை ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ள விசாரணைக் குழுவை நகைச்சுவையாக கருதி முற்றாக நிராகரிப்பதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
இது மக்களின் பணத்தை வீண் விரயம் செய்வதுடன், தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களை அவமதிக்கும் செயலாகும் என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட் தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
சர்வதேச கண்காணிப்பு மற்றும் மேற்பார்வைக்கு உட்பட்ட சுயாதீன ஆணைக்குழுவினால் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்காக இடமாற்றம் செய்யப்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் 20 பேரை அதற்கே பயன்படுத்திக் கொண்டு அவர்கள் நிறுத்திய இடத்தில் இருந்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1