களுத்துறை கடற்கரையில் அநாகரீகமாக நடந்து கொண்ட 35 சிறார்கள் மற்றும் தம்பதிகளை களுத்துறை தெற்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் பிரகாரம், களுத்துறை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கடற்கரையில் அநாகரீகமாக நடந்து கொண்ட சிறார்கள் உட்பட சுமார் 75 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் களுத்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள், அவர்களில் சிலர் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்கிறோம் என்ற போர்வையில் தங்கள் வீடுகளில் இருந்து வந்து கடற்கரையில் தங்கியுள்ளனர்.
தெற்கு களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அனைவரும் கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1