போலிச்சான்றிதழை பயன்படுத்தி வடமாகாண ஆசிரிய சேவையில் இணைந்து 3 வருடங்களாக கடமையாக்கி வந்து போலி ஆசிரியர் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய தென்னிலங்கையை சேர்ந்த மேற்படி சந்தேக நபர், 2019 ஆம் ஆண்டு வடமாகாண கல்வி அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் ஆட்சேர்ப்பில் போலி சான்றிதழை பயன்படுத்தி தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் ஆசிரியரான சேவையாற்றியும் வந்துள்ளார்.
இந்த நிலையில் ஆசிரியர் தரம் மூன்றில் இருந்து தரம் இரண்டுக்கு தகுதியுயர்வு பெறுவதற்காக அவர் விண்ணப்பித்த போது அவர் வழங்கிய சான்றிதழ்கள் போலியானவை என்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற தடுப்பு பிரிவுக்கு முறைப்படி வழங்கப்பட்டதை தொடர்ந்து சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த பிறிதொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.