குறைவாக, பொருத்தமற்ற ஆடை அணிந்துள்ளதாக குறிப்பிட்டு, ஒரு விற்பனை அங்காடியிலிருந்து தன்னை வெளியேற்றி விட்டதாக பிரேசிலை சேர்ந்த மொடல் அழகியொருவர் குமுறியுள்ளார்.
ஜெய்னே லிமா என்ற அழகி, தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், தனது “மார்பகங்கள் பெரிதாகவும் தனித்து நிற்கின்றன” என்பதாலும் அவரது ஆடைகளை மீறி அவை வெளிப்பட்டதாகவும் கூறுகிறார்.
இன்ஸ்டாகிராம் தளத்தில் 477,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட அவர், பிரேசிலின் சாண்டா கேடரினாவில் உள்ள விற்பனை அங்காடியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அந்த நேரத்தில் தனது சமூக ஊடகப் பக்கங்களுக்காக சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க அவர் ஒரு நண்பருடன் விற்பனை அங்காடிக்குச் சென்று கொண்டிருந்தார்.
அன்றைய வானிலை 30C வெப்பமாக இருந்தது – அதனால் அவர் ஒரு பாவாடை, முழங்கால் உயரமான சொக்ஸ் மற்றும் மார்பகங்கள் மற்றும் கைகளை மறைக்கும் ஒரு வெள்ளை மேல் ஆடையைத் தேர்ந்தெடுத்ததாக கூறினார்.
அவரது உடலின் பெரும்பாலான பகுதிகள் மூடப்பட்டிருந்தாலும், அவரது இறுக்கமான உடைகளால்- அது பொருத்தமற்றது என்று குறிப்பிடப்பட்டு அவர் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
“நான் அங்காடிக்குச் சென்றேன், நான் அவமானப்படுத்தப்பட்டேன், நான் கடற்கரையில் வசிக்கிறேன், அங்கு 30C வெப்பம். சமூக ஊடக பிரபலங்கள் செய்வது போல, ஒரு வீடியோவை உருவாக்கும் யோசனை எங்களுக்கு இருந்தது.
வீடியோ எஸ்கலேட்டரில் படமாக்கப்பட்டது. நான் ஒன்றும் முழுக்க கழற்றிப் போட்டுவிட்டு வீடியோ எடுக்கவில்லை என்பதை நீங்கள் பார்க்கலாம். இது முன்பக்கத்திலிருந்து படமாக்கப்பட்டது.
என் மார்பகங்கள் பெரியதாகவும் தனித்து நிற்கின்றன என்றும் எனக்குத் தெரியும், ஆனால் நான் அவற்றை விரும்புகிறேன். நான் ஒரு வீடியோவை பதிவு செய்ய முடிந்தது.
நான் எந்த கடை முகப்புகளையும் அல்லது சட்டத்தை மீறும் எதையும் படமெடுக்கவில்லை, எல்லோருக்கும் முன்பாக அவமானப்படுத்தப்பட்டேன்” என்றார்.
“அந்த நேரத்தில், ஒரு பாதுகாவலர் கத்திக் கொண்டு வந்தார். அங்காடியிலிருந்து அனைவரும் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நான் ஒரு கடையில் கொள்ளையடித்தது அல்லது ஏதோ ஒரு குற்றத்தைச் செய்தது போல் தோன்றியது.
பெண்கள் எப்படி கஷ்டப்படுகிறோம் என்பதைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. மக்கள் பெண்களை மதிக்க வேண்டும். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அவள் ஒரு இல்லத்தரசியாக இருந்தாலும் சரி அல்லது ஏதாவது ஒன்றை அணிந்திருந்தாலும் சரி, நாம் அனைவரும் மரியாதைக்குரியவர்கள்“ என்றார்.
பாதுகாவலருடன் இணைந்து மேலும் இரண்டு பணியாளர்கள், என்னை ஒரு பின் அறைக்கு செல்ல வேண்டும் என்றார்கள். நான் அவர்களை வீடியோ எடுத்தேன்.
பின்னர், தொலைபேசியிலிருந்த அனைத்து வீடியோவையும் அழிக்குமாறு கட்டாயப்படுத்தினர் என்றார்.