திருகோணமலை, நிலாவெளி, இலுப்பைக்குளம் பகுதியில் பௌத்த பிக்குகள் சொந்தம் கொண்டாடும் பகுதியில் விகாரைக்கான பெயர்ப்பலகை நாட்டப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரையென்ற பெயரில் விகாரையொன்றை அமைக்க பௌத்த பிக்குகள் எடுத்த முயற்சி, கிழக்கு ஆளுனரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.
அந்த காணிக்குள் விகாரைக்குரிய பௌத்த பிக்கு நுழைய தடைவிதித்து அறிவித்தலும் விடப்பட்டது.
என்றாலும், அண்மையில் திருகோணமலை மாவட்ட செயலகத்துக்குள் புகுந்த பிக்குகள் கலாட்டாவில் ஈடுபட்டதை தொடர்ந்து, அந்த தடைஅறிவித்தல் விலக்கப்பட்டிருந்தது.
ஆயினும், அங்கு விகாரை அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில், இன்று பௌத்த பிக்குகள் சிலர் விகாரைக்கான பெயர்ப்பலகையை அங்கு நாட்டியுள்ளனர்.
அந்த பகுதியில் சிங்கள மக்கள் குடியிருக்கவில்லை. தமிழ் மக்களின் குடியிருப்பின் மத்தியில் விகாரை அமைப்பதற்கு எதிராக அண்மையில் தமிழ் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.