26.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil
குற்றம்

கண்டதும் காதலில் விழும் இலங்கைப் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை: அழகிய யுவதிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியென குறிப்பிட்டு, அழகிய யுவதியொருவரை மாற்றி வலையில் விழுத்தி, மொரந்துடுவ பிரதேசத்தில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து பல இலட்சம் பெறுமதியான தங்கநகைகளை கொள்ளையடித்து சென்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைதானவர் முன்னாள் இராணுவச் சிப்பாய்.

சந்தேக நபர் பொலிஸாரால் வழங்கப்படும் அடையாள அட்டையை போலியாக தயாரித்து, பொலிஸ் உத்தியோகத்தர் போல் பாவனை செய்துள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

மசாஜ் நிலையம் ஒன்றில் பணிபுரியும் அழகிய யுவதியுடன் உறவை வளர்த்துக்கொண்ட சந்தேகநபர், பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எனக் கூறி அவருடன் விடுதி ஒன்றிற்குச் சென்றுள்ளார்.

யுவதியை பலாத்காரம்  செய்த சந்தேக நபர், அவரிடம் இருந்த தங்க நெக்லஸ் உட்பட சில தங்கநகைகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

யுவதியின் முறைப்பாட்டிற்கு அமைய மொரந்துடுவ பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர் போல் நடித்து பல பெண்களை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்து பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மனநலம் குன்றிய சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவருக்கு 30 வருட சிறை!

Pagetamil

முழங்காவில் உணவகத்துக்குள் புகுந்து வாள்வெட்டு

Pagetamil

ஓமந்தைக் கொலையுடன் தொடர்புடைய 5 பேர் கைது!

Pagetamil

சிறுமியின் தலைமுடியை வெட்டிய வளர்ப்புத்தாய் கைது!

Pagetamil

மொடலாக மாற ஆசைப்பட்ட 23 வயது யுவதி வல்லுறவு!

Pagetamil

Leave a Comment