Site icon Pagetamil

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு மூன்று நாள் விவாதத்தைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் சற்று முன்னர் நடைபெற்றது.

பிரேரணைக்கு எதிராக 113 எம்பிக்களும் ஆதரவாக 73 எம்பிக்களும் வாக்களித்தனர். மேலும், வாக்கெடுப்பின் போது 38 எம்.பி.க்கள் ஆஜராகவில்லை.

Exit mobile version