சைபர் வழக்கில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்ரான் அடைக்கப்பட்டுள்ள அட்டாக் சிறையில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது.
தோஷகானா வழக்கில் இம்ரான் கானின் மூன்றாண்டு சிறைத்தண்டனையை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இடைநிறுத்திய ஒரு நாளுக்குப் பிறகு, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தீர்ப்பு இடைநிறுத்தப்பட்ட நிலையில், சைபர் வழக்கு தொடர்பாக அவரை “நீதிமன்ற காவலில்” வைத்து இன்று ஆஜர்படுத்துமாறு அட்டாக் சிறை அதிகாரிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சைபர் வழக்கு இம்ரானின் வசம் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் இராஜதந்திர ஆவணம் தொடர்பானது. இம்ரானை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான அமெரிக்காவின் அச்சுறுத்தல் அடங்கிய உரையாடல் ஆவணம் அது. இதே வழக்கில் இம்ரான் கான் கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஷா மஹ்மூத் குரேஷிக்கு எதிரான வழக்குகளும் நடந்து வருகின்றன.