யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்று திங்கட்கிழமை (28) இடம்பெற்றது.
அதிகாலை தேர்த் திருவிழாவுக்கான கிரியைகள் ஆரம்பமாகி காலை 7.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை ஆரம்பமானது.
வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து துர்க்கையம்மன் சித்திரத் தேரில் எழுந்தருளினார்.
இதன்போது பலரும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் பொருட்டு விசேட வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதேவேளை நாளை செவ்வாய்க்கிழமை (29) துர்க்கா புஷ்கரணி தீர்த்தக் கேணியில் காலை துர்க்கை அம்பாளின் தீர்த்தோற்சவமும், மாலை கொடியிறக்க உற்சவமும் நடைபெறவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1