மாதம்பை, ரத்மல்கர அரச தென்னந் தோட்டத்தில் தேங்காய் திருடிய இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவர் தோட்ட காவலர்கள் மற்றும் நிர்வாகத்தினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, இன்று (18) மாதம்பை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள மாதம்பை பனிரெண்டாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
தேங்காய் திருட்டில் ஈடுபட்ட லான்ஸ் கோப்ரல் தோட்ட நிர்வாகத்தினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டபோது, தோட்டத்தில் திருடப்பட்ட 182 தேங்காய்களும் மீட்கப்பட்டதாக மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1