28.8 C
Jaffna
September 11, 2024
இலங்கை

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் மாணவிகளை இரகசியமாக படம் பிடித்த ஆசிரியருக்கு எதிராக போராட்டம்!

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்பாக இன்று மதியம் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலை முடிவடைந்ததும் பாடசாலை பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய உயர்தர மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரொருவர் பாடசாலைக்கும் பாடசாலை அதிபருக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக தெரிவித்தே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த திங்கட்கிழமை உயர்தர மாணவர்களின் மதிப்பீட்டு அறிக்கை தொடர்பாக பெற்றோருக்கான கலந்துரையாடல் இடம்பெற்றபோது கலந்துரையாடலுக்கு வராத பெற்றோர்களின் மாணவர்களை வகுப்புக்கு வெளியே நிறுத்தி வைத்தார்.

இதன்போது பாடசாலையில் ஆசிரியர் ஒவர் மாணவிகளிடம் சாதாரனமாக உரையாடுவது போன்று உரையாடி அதனை ரகசியமாக தனது தொலைபேசியில் காணொளி எடுத்து மூக வலைத்தளங்களில் பதிவேற்றி பாடசாலைக்கும், மாணவிகளுக்கும் களங்கத்தை ஏற்படுத்திய ஆசிரியரை இடமாற்றுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தெல்லிப்பழை கோட்டக் கல்வி பணிப்பாளர் வேலாயுதர் அரசகேசரி மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவரிடம் மாணவர்களினால் கோரிக்கை கடிதமும் வழங்கப்பட்டது.

இதனை வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக வாக்குறுதி வழங்கியதை அடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிப்பர் மோதி பாடசாலை மாணவி பலி

Pagetamil

மசாஜ் நிலையத்தில் 2 அழகான யுவதிகளை தெரிவு செய்து கடத்திச் சென்று கூட்டு வல்லுறவு: இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Pagetamil

இலஞ்சம் வாங்கிய போது சிக்கிய இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சகாக்கள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Pagetamil

பிம்ஷானியின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன: தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Pagetamil

விஜயகாந்தின் கட்சியும் சஜித்துக்கு ஆதரவு!

Pagetamil

Leave a Comment