எட்டு மாதங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதையடுத்து உள்நாட்டில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்.
தனுஷ்க குணதிலக்க செவ்வாய்க்கிழமை சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தன்னை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரினார்.
கடந்த ஆண்டு ரி20 உலகக் கோப்பைக்காக அவுஸ்திரேலியா சென்ற தனுஷ்க குணதிலக்க, அந்த நாட்டு யுவதியொருவருடன் டேட்டிங் செயலியில் அறிமுகமாகி, நேரில் சந்தித்த அன்றே கொடூரமான முறையில் வல்லுறவுக்குள்ளாக்கியிருந்தார்.
இலங்கை அணி அவுஸ்திரேலியாவிலிருந்து புறப்பட தயாரான போது, அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
கடவுச்சீட்டை ஒப்படைத்துவிட்டு, எந்த ஒரு சர்வதேசப் பயணப் புள்ளியையும் அணுகக்கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளுடன் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
இந்த வாரத்தில் நான்கு நாட்களுக்கும், மாத இறுதியில் நான்கு நாட்களுக்கும் சர்வதேச புறப்பாடு புள்ளிகளை அணுகுவதற்கான தடையை இடைநிறுத்துவதற்கு குணதிலக்கவை அனுமதிப்பதற்கு பதில் நீதிபதி கிரேம் ஹென்சன் ஒப்புக்கொண்டார்.
தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவிற்குள் பயணம் செய்யத் திட்டமிட்டால், தனது பயணத்தின் காலம், இடம் மற்றும் பயணத் திட்டம் ஆகியவற்றைக் குறைந்தது 48 மணி நேரத்திற்கு முன்பே பொலிசாருக்கு அறிவிக்க வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்தார்.
இருப்பினும், அவர் வாரத்திற்கு மூன்று முறை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும். ஒரு மொபைல் போன் வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் காரணமாக அவர் டேட்டிங் தளங்கள் அல்லது பயன்பாடுகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் ரி20 உலகக்கோப்பை ஆடச் சென்ற தனுஷ்க குணதிலக்க, காயம் காரணமாக கிரிக்கெட் ஆடவில்லை. ஆனால் வேறு விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தது பின்னரே தெரிய வந்தது.
ஒரு பெண்ணுடன் டேட்டிங் செயலியில் பழகியதாகவும், அவர்கள் சந்திப்பதற்கு முன்பு அவருடன் ஆன்லைனில் பல முறை அரட்டை அடித்ததாகவும் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
இரவு 11 மணியளவில் சிட்னியின் கிழக்குப் புறநகரில் உள்ள பெண்ணின் வீட்டிற்குச் செல்வதற்கு முன், இருவரும் நகரத்தில் மது அருந்தியுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
மது அருந்தி விட்டு படகில் பெண்ணின் வீட்டிற்கு சென்றபோதே தனுஷ்க குணதிலக்க சில்மிசத்தை ஆரம்பித்துள்ளார். அந்த பெண்ணின் அனுமதியின்றி அவரது பின்பகுதியை தட்டியுள்ளார்.
பின்னர், வீட்டுக்கு சென்றதும், உடலுறவில் ஈடுபட்டனர். ஆணுறை அணியுமாறு பெண் வலியுறுத்த குணதிலக மறுத்தார். ஆணுறை அணியாவிட்டால் உடலுறவுக்கு சம்மதிக்க மாட்டேன் என பெண் குறிப்பிட, தனுஷ்க குணதிலக்க ஆணுறை அணிந்தார். எனினும், உடலுறவின் இடையில் ஆணுறை நிலத்தில் இருப்பதை கண்டு பெண் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கேட்டு, பெண் எதிர்ப்பு தெரிவிக்க, அவரை தாக்கி, கழுத்தை நெரித்து பலவந்தமாக உடலுறவு கொண்டார்.
அத்துடன், தனது ஆணுறுப்பை பெண்ணின் வாய்க்குள் திணித்து, அவரை மூச்சடைக்க செய்தார். இவ்வாறு 3 முறை செய்து, 20 வினாடிகள் மூச்சடைக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.