27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil
மலையகம்

சந்திக்க வர மறுத்த காதலன்: ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்த யுவதி!

கண்டியில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற இலக்கம் 20 சரக்கு ரயிலின் முன் பாய்ந்து இளம் யுவதி ஒருவர் (09) காலை உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை டயகம பிரதேசத்தை சேர்ந்த கணபதி அனுஷா தர்ஷனி என்ற 28 வயதுடைய யுவதியே புகையிரதத்தில் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதி ஹட்டன் நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணிபுரிகிறார். ஹட்டன் பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவருடன் ஐந்து வருடங்களாக காதல் உறவுயில் இருந்துள்ளார்.

இன்று (09) காலை பணியிடத்திற்கு வந்த யுவதி தன்னை சந்திக்குமாறு காதலனுக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார். அதை காதலன் நிராகரித்ததால், ஆத்திரமடைந்த காதலி, ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

ஹட்டன் மல்லியப்பு பிரதேசத்தில் பதுளை நோக்கி ஓடிக்கொண்டிருந்த புகையிரதத்தில் யுவதி பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட யுவதியின் சடலம் காதலனால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக டிக்ஓயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

சமயச்சடங்குகள் செய்து நாயின் உடல் அடக்கம்!

Pagetamil

இ.போ.ச காவலாளி கொலை: 3 பேருக்கு விளக்கமறியல்!

Pagetamil

கண்டி தேசிய வைத்தியசாலையில் CT Scanner இயந்திரத்திற்கு கௌரவிப்பு

east pagetamil

காதலிக்க மறுத்த யுவதியை அடித்தே கொன்ற ஒருதலைக் காதலன்!

Pagetamil

சிறுநீர் கழிக்கும் விவகாரத்தில் கடைக்காரரை தாக்கிய சாரதிகள்

Pagetamil

Leave a Comment