28 C
Jaffna
December 5, 2023
இலங்கை

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயாரை கவனிக்க விளையாட்டு கனவை துறந்த மகள் சச்சினி பெரேரா!

டுபாயில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை பார்த்தாலும், மீண்டும் இலங்கைக்காக போட்டிகளில் பதக்கம் வெல்வதே தனது விருப்பம் என தெரிவித்துள்ளர் சச்சினி பெரேரா.

இலங்கையின் கோலூன்றி பாய்தல் சம்பியன்- தேசிய சாதனைக்கு சொந்தக்காரி- சச்சினி பெரேரா டுபாயில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றும் விவகாரம் கடந்த சில வாரங்களாக ஊடகக் கவனத்தை பெற்றிருந்தது.

24 வயதான சச்சினி பெரேராவின் தாயார் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, படுக்கையில் வீழ்ந்து விட்டார். நாட்டின் பொருளாதார நெருக்கடி, மருந்து விலைகளின் உச்சம், விளையாட்டுத்துறையை மட்டும் நம்பி தாக்குப்பிடிக்க முடியாத சூழல்… இந்த பின்னணியில் ஒரு மகளாக சச்சினி பெரேரா தனது கனவுகளையெல்லாம் தியாகம் செய்து, நோயால் பாதிக்கப்பட்ட தாயாரின் சிகிச்சைக்கு பணம் திரட்ட, டுபாய்க்கு பணிப்பெண்ணாக சென்றார்.

 

சச்சினி பெரேரா கடந்த வருடம் தனது தடகள கனவுகளை நிறுத்தி வைத்து விட்டு, டுபாய் புறப்பட்டு விட்டார். ஆனால் பல மாதங்கள் கழித்தே, இந்த விவகாரம் ஊடகக் கவனம் பெற்றது. இலங்கை ஊடகங்களில் இந்த விவகாரம் வெளியானதை தொடர்ந்த, டுபாயின் முன்னணி ஊடகமான த நஷனல், சச்சினியின் நேர்காணலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பணிப்பெண்ணாக சென்ற பின்னர், சச்சினி வழங்கிய முதலாவது நேர்காணலில்,

“இதுதான் (கோலூன்றி பாய்தல்) எனது உலகம் என்று நான் உணர்கிறேன். படிப்படியாக நான் பறப்பேன். எனது கனவு மீண்டும் பறப்பதே“ என்றார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு செல்வந்த குடும்பத்தில்  ஒரு இளம் குழந்தையை கவனித்துக்கொள்வதும், பகலில் ஒரு வீட்டில் வீட்டு வேலைகளை செய்வதுமே சச்சினியின் வேலை. வேலை முடிந்ததும் உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குகிறார்.

உடற்பயிற்சி கூடம், குளம் வசதிகளைப் பயன்படுத்துவதற்கும், ஒவ்வொரு வாரமும் தன்னை கடற்கரை மற்றும் சஃபா பூங்காவிற்கு அழைத்துச் சென்று பயிற்சி பெறுவதற்கும் தனது தற்போதைய முதலாளிகளுக்கு நன்றி கூறுவதாகக் கூறினார்.

“அவர்கள் என்னை நன்றாக நடத்துகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

“அவர்களால் நான் ஒரு மோசமான சூழ்நிலையைத் தாண்டிவிட்டேன்.” என்றார்.

இலங்கையிலுள்ள தனது பயிற்சியாளரால் அனுப்பப்படும் வாராந்திர உடற் பயிற்சி அட்டவணையை அவர் பின்பற்றுகிறார்.

 

“எனது குடும்பத்திற்கு தீர்வு காண டுபாய் வந்தேன். என் பெற்றோர் சொல்கிறார்கள், ‘நீங்கள் ஒரு விளையாட்டு வீரர், நீங்கள் ஒரு வீட்டு வேலைக்காரி அல்ல. இது உங்கள் விளையாட்டு வாழ்க்கையிலிருந்து ஒரு இடைவெளி’ என. கோலூன்றி பாய்தல் போட்டியில் சர்வதேசப் பதக்கம் வென்ற இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணாக நான் இருக்க விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

டுபாயில் உள்ள இலங்கையின் தூதரக அதிகாரி அலெக்ஸி குணசேகரவிடம் த நஷனல் ஊடகம் தொடர்பு கொண்டபோது, அவர் எமிரேட்டில் விளையாட்டு தொடர்பான வேலையைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.

அவர் பயிற்சியில் கவனம் செலுத்துவதற்காக விருப்பங்களை ஆராய்வதற்காக புதன்கிழமை டுபாயில் விளையாட்டு அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பிற்கு பெரேராவுடன் சென்றார். அதற்கான விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன, என்றார்.

இலங்கையின் கோலூன்றி பாய்தல் சாதனைக்கு சொந்தக்காரி சச்சினி பெரேரா. கடந்த ஆண்டு 3.71 மீற்றர் பாய்ந்து தேசிய சாதனையை படைத்தார்.

ஆரம்பத்தில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்ற சச்சினி. 2017 இல்  இராணுவத்தில் சேர்ந்த பின்னர் கோலூன்றி பாய்தலில் ஈடுபட தொடங்கினார்.

இருப்பினும், அவரது தாயார் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் சச்சினி பெரேரா தனது கனவுகளை இடைநிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

“எனது பெற்றோர் இல்லாமல் நான் ஒன்றும் இல்லை, என் அம்மா படுக்கையில் இருக்கும்போது நான் எப்படி என் குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியாமல் இருப்பது,” என்று அவர் கூறினார்.

 

“நான் டுபாயில் ஒரு வேலையைத் தேட முடிவு செய்தேன், அதனால் அம்மாவுடைய சிகிச்சைக்கு நான் பணம் செலுத்த முடியும்.”

பெரேரா தனது மாதச் சம்பளத்தின் பெரும்பகுதியை தனது தாயாரைப் பராமரிப்பதற்காக வீட்டிற்கு அனுப்புகிறார். இப்போது தாயார் பிறரின் உதவியோடு சில அடிகள் நடக்க முடியும்.

ஒரு பணிப்பெண்ணாக டுபாய் சென்று, இலங்கையை “எதிர்மறையாக” சித்தரித்ததற்காக தன்னை கேலி செய்யும் சமூக ஊடகங்கவாசிகளின் விமர்சனங்கள் தொடர்பாக பதிலளிக்கையில், “நான் டுபாய்க்கு வந்து வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்வது எனது தனிப்பட்ட வாழ்க்கை” என்று அவர் கூறினார்.

“நான் வெளியேறியபோது, என் தடகள வாழ்க்கையை யாரும் கவனிக்கவில்லை, அதனால் என் குடும்பத்தை கவனித்துக்கொள்ள நான் வெளியேற வேண்டியிருந்தது. இப்போது ஏன் வீட்டுப் பணிப்பெண்ணாகச் செல்கிறேன், நான் திரும்பி வரவேண்டும் என்று சொல்கிறார்கள்.

நான் ஏன் இலங்கையைப் பற்றி சோகமான செய்திகளை வெளியிடுகிறேன் என்று மக்கள் கேட்கிறார்கள், ஆனால் நான் என் அம்மாவையும் என் குடும்பத்தையும் கவனித்துக்கொள்கிறேன் என்று கூறுகிறேன்.” என்றார்.

இலங்கைக்காக பதக்கங்களை வென்ற தனது நண்பர்கள் மற்றும் பிற விளையாட்டு வீரர்களுக்காகவும் பேச விரும்புவதாகவும், அவர்களும் வாழ்க்கையுடன் போராடுவதாகவும் பெரேரா கூறுகிறார்.

“மக்கள் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடையது ஒரே ஒரு கதைதான். இலங்கையில் எங்களிடம் பல கதைகள் உள்ளன, அவர்களுக்கு உதவி தேவை,” என்று அவர் கூறினார்.

“எனது போட்டி, எனது கனவுகள், எனது எதிர்காலம் ஆகியவற்றை நான் இழக்கிறேன். இது மிகவும் கடினம். சில நேரங்களில் நான் என் பயிற்சியாளருடன், என் தந்தையுடன் அழுவேன். நான் எனது விளையாட்டை மீண்டும் தொடங்க விரும்புகிறேன்.” என்றார்.

பயிற்சிக்கான ஆதரவு
இலங்கை அரசாங்கம் அவரது கதையை கவனத்தில் எடுத்துள்ளது, அதாவது பெரேராவுக்கு மகிழ்ச்சியான முடிவு இருக்கலாம்.

“இலங்கையின் தேசிய சாதனையாளர் ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்து வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிகிறார் என்ற செய்தி எங்களுக்கு கிடைத்ததும்,

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புதுமுறிப்பு குளத்திலிருந்து மீன்கள் வெளியேறாமல் தடுப்பு வலை

Pagetamil

ஷானி அபேசேகரவை வாகன விபத்தில் கொலை செய்ய சதித்திட்டம்!

Pagetamil

காசாவில் வந்தால் இரத்தம்… தமிழர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?: இலங்கை முஸ்லிம்களிம் கேட்கிறார் சபா.குகதாஸ்!

Pagetamil

வவுனியாவில் கொடூரமாக தாக்கிய ஆசிரியர்: உயர்தர மாணவி தப்பியோட்டம்!

Pagetamil

யாழில் பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம்: வாள்வெட்டுக்குழு தப்பியோட்டம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!