சீன வெளிவிவகார அமைச்சர் கின் கேங் பகிரங்கமாக தோன்றதான் பிண்ணனியில் மர்மங்கள் வலுத்துள்ளன. அவரது காதல் விவகாரத்தினால் அவர் “காணாமல் போயுள்ளதாக“ மேற்கு ஊடகங்கள் கூறுகின்றன.
சீன அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக அறியப்பட்டவர் வெளிவிவகாரஅமைச்சர் கின் கேங் (57). இவர் கடந்த ஜூன் 25ஆம் திகதி இலங்கை, ரஷ்யா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு கடந்த மூன்று வாரங்களாக அவர் பொதுவெளிக்கு வரவில்லை. அரசு சார்ந்த எந்த நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொள்ளவும் இல்லை.
கின் கேங் இருப்பிடம் தொடர்பான எந்த தகவல்களையும் இதுவரை சீன வெளியுறவு அமைச்சகமும் வெளிப்படையாக வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து ‘எங்கே கின் கேங்?’ என்று சர்வதேச ஊடகங்கள் கேள்வியெழுப்ப ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில், கின் கேங் மாயமானதற்கு காரணமாக இருப்பவர் பத்திரிகையாளர் ஃபூ சிஸாடியான் தான் என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
ஹொங்கொங்கை தலைமையமாகக் கொண்டு செயல்படும் பினீல்ஸ் செய்தி சனலில் பிரபல பத்திரிகையாளராக இருந்து வந்தவர் ஃபூ சிஸாடியான். இவருக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் கின் கேங்கும் காதல் இருந்ததாகவும், அதன் பின்னணியில்தான் கேங் மாயமாகியிருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.
அமெரிக்க குடியுரிமை பெற்ற ஃபு சியாவோடியனுடன் கின் கேங் கொண்டிருந்த காதல் குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒழுங்கு குழு அமைத்து விசாரணை நடத்தி, அது தொடர்பாக அறிக்கையும் வெளியிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பிறகுதான் கின் கேங் பொதுவெளியில் வராமல் இருப்பதாக சீன பத்திரிகைகளும் தெரிவிக்கின்றன.
சீன கம்யூனிஸ்ட் கட்சி, அத்தகைய உறவுகளை வைத்திருப்பதை அதிகாரப்பூர்வமாக தடை செய்கிறது.
சீன வெளியுவு அமைச்சின் இணைய தகவலின்படி கின் கேங் திருமணம் செய்தவர். ஒரு பிள்ளை உள்ளது.
தற்போது பரவும் தகவலின்படி கின்-ஃபூ ஜோடி திருமணத்துக்கு புறம்பாக ஒரு குழந்தை பெற்றெடுத்துள்ளனர்.