15 வயது பாடசாலை மாணவிகள் 3 பேரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 17 வயதான 3 காதலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெதிகும்பர பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று காதல் ஜோடிகள் சூக்கிரி எல்லையை பார்வையிடுவதற்குச் சென்றுள்ளர்.
கடந்த 12ஆம் திகதி குறித்த சிறுமிகள் மூவரும் அன்றைய தினம் பாடசாலைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதாகவும், பாடசாலைக்கு செல்லாமல், மூன்று இளைஞர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் ஹுலந்தாவ தெற்கு பகுதிக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சூக்கிரி எல்லையை பார்வையிட அன்று காலையில் சென்றுள்ளனர். அதன்பின்னர் அருகிலிருக்கும் காட்டுக்குள் அழைத்துச் சென்று இரண்டு காதலிகளை காதலர்கள் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர். மற்றைய காதலனும் தனது காதலியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
பின்னர் இரண்டரை மணியளவில் மூன்று மாணவிகளும் தத்தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுதொடர்பில் விசாரித்த போதே மேற்படி சம்பவம் அம்பலமானது.
சம்பவம் தொடர்பில் மாணவி ஒருவரின் தந்தை செய்த முறைப்பாட்டின் பிரகாரம், காதலிகள் மூவரும் காதலர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். மாணவிகள் மூவரும் வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காதலர்கள் மூவரும் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.