Pagetamil
உலகம்

சமூக வலைதள ஃபிட்னஸ் பிரபலம் ஜோ லின்ட்னர் 30 வயதில் திடீர் உயிரிழப்பு!

30 வயதான சமூக வலைதள ஃபிட்னஸ் பிரபலம் ஜோ லின்ட்னர் காலமானார். அவருக்கு அனீரிசிம் பாதிப்பு ஏற்பட்டது அவரது மரணத்திற்கு காரணம் என தெரிகிறது. இதனை அவரது காதலி சமூக வலைதள பதிவில் உறுதி செய்துள்ளார்.

ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஜோ லின்ட்னரை இன்ஸ்டாகிராம் தளத்தில் சுமார் 8.5 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். யூடியூப் தளத்தில் சுமார் 1 மில்லியன் பேர் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் ஜோஸ்தெடிக்ஸ் என்ற பெயரில் இயங்கினார்.

ஃபிட்னஸ் சார்ந்த ஆலோசனைகளை அவர் அதில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில், ஜூன் 30 அன்று அவர் உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அவரது கழுத்து பகுதியில் வலி இருந்துள்ளது. அதனை அவரை சுற்றி இருந்தவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதன் பின்னர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தான் அவரது உயிர் பிரிந்துள்ளது. அவர் மரணத்திற்கு காரணம் அனீரிசிம் பாதிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை சமூக வலைதளத்தில் பின்தொடர்ந்து வருபவர்கள், நண்பர்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அவரது இளவயது மரணத்திற்கான காரணம் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ட்ரம்ப்- புடின் தொலைபேசி உரையாடல்: 30 நாள் எரிசக்தி கட்டமைப்புக்கள் மீதான தாக்குதல் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்புதல்!

Pagetamil

9 மாதங்களுக்குப் பிறகு பாதுகாப்பாக பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

Pagetamil

போர்நிறுத்தம் பற்றிய புடினின் கருத்துக்கு டிரம்பின் எதிர்வினை

Pagetamil

’30 நாள் போர் நிறுத்தத்திற்கு தயார்; ஆனால்…’: புடின்

Pagetamil

உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் பயணிகள் கடத்தல்: பிந்திய நிலவரம்!

Pagetamil

Leave a Comment